கொட்டுற மழையில

கொட்டுற மழையில நித்தமும் நினையிறேன்
திட்டுற மின்னல சாலையில் கடக்கிறேன்
முட்டுற தூறல முழுவதும் விரும்பறேன்
கட்டுர எழுதிட காட்சிகள் கோர்க்கிறேன்

சில்லென துளிபட பனியென நினைக்கிறேன்
கல்லொன்னு மின்னிட சட்டென‌ திரும்பறேன்
தள்ளியே போகிடும் மரங்களை ரசிக்கிறேன்
அள்ளியே கொடுத்திடும் மேகத்தை மதிக்கிறேன்

சேறான வழிகளில் வேகத்தை குறைக்கிறேன்
வேறான வழித்தடம் விழிகளால் தேடுறேன்
கூரான இடியொலி செவிவழி தாக்கிட‌
சீரான பயணத்தை வழக்கமாய் தொடருறேன்

வீட்டுக்கு பக்கத்தில் மழையில்லை என்றதும்
பாட்டுக்கு முதல்முறை மனதினை திருப்பறேன்
காட்டு வழிப்பயணம் இப்படி முடிந்திட‌
முற்றிலும் குளித்தவன் குளித்திடச் செல்கிறேன்

தினம்தினம் வந்திடு அன்பான மழைப்பெண்ணே
மனதினில் வைத்திடு கவிதைக்கு தலைப்பொன்றை
இன்றைக்கு எதிர்பார்ப்பேன் குடையோ மழையுடையோ
வேண்டுமென்றே மறந்திடுவேன் நீவேண்டுமேன்றே வேண்டுகிறேன்

அ.வேளாங்கண்ணி

எழுதியவர் : அ.வேளாங்கண்ணி (9-Jul-20, 7:09 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 1731

மேலே