கரும்புக்காடு
கரும்புக்காடு
===========================================ருத்ரா
முகத்தோடு முகம் பார்த்து
சேட்டிங்க் செய்து அலுத்துப்போச்சு.
பழையபடி அந்த
கரும்புக்காட்டின் ஊடே
தெரியும் நிலவைப்பார்த்து
அந்த ஒளியைப்பருகும் முறையே
மிகவும் இனிக்கிறது.
ஆம்.
அது தான் உங்கள் வீட்டுச்
சன்னல் கம்பிகள்.
அதன் அருகே வந்து நில்.
பொன் முலாம் பூசியது போல்
ஒவ்வொரு நொடியும்
சுடர் வீசும்.
வந்து உன் முகம் காட்டு.
அதுவே என் அகநானூறு.
===========================================