வாய்த்தவளை நினைத்து வழிந்திட்டான்

`
மலரொன்றின் இதழ் விரிந்திருக்க
மங்கையவள் தலை கவிழ்ந்திருக்க
மாலைநேர இருளும் கவ்வியிருக்க
மாள்பவர் உறைவிடமாய் சூழலிருக்க
காதலின் உச்சமென நினைத்திருக்க
காதலனோ இன்னும் வாராதிருக்க
காரணத்தை அறியாது மனம்துடிக்க
காலம் கரைந்தாலும் பொறுத்திருக்க
காத்திருக்கும் அவளுக்கு படபடக்க
அமைதி நிலையாய் படர்ந்திருக்க
அழகியவள் சிலையாய் வீற்றிருக்க

ஓடிவந்தவன் அருகேவந்து நின்றிருக்க
ஓரசைவும் விவாதமும் நிகழாதிருக்க ,
ஆண்களுக்கே உரிய அவசரமிருக்க
ஆத்திரம் பொங்கி அடங்கியிருக்க
வினவியும் பதிலேதும் கூறாமலிருக்க
விடியும்வரை அவளும் உடனிருக்க
கோபம் தன்மானம் இணைந்திருக்க
கோமகள் அவளொன்றும் பேசாதிருக்க ,

கொற்றவன் வழியின்றி முணுமுணுக்க
கொஞ்சும் சிரிப்பை அவளுதிர்த்தாள் !
இமயத்தின் உச்சியை அடைந்தவனாக
இன்பத்தின் எல்லையைத் தொட்டான் !
உள்ளங்கள் ஒன்றியதும் ஊமையானது
உடல்கள் தழுவிக்கொன்டு ஓருடலானது !
வாய்த்தவளை நினைத்து வழிந்திட்டான்
வாய்வலிக்க புகழுரை மொழிந்திட்டான் !

பழனி குமார்
08.07.220

எழுதியவர் : பழனி குமார் (8-Jul-20, 10:48 pm)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 280

மேலே