முகநூல் பதிவு 28

மாஸ்க் இன்றைய அத்யாவசியத் தேவையில் ஒன்றாகிவிட்டது.... இனிவரும் காலங்களில் வெளியில் செல்லும்போது செருப்பு அணிந்து செல்வதுபோல் மாஸ்க் அணிவது அவசியமாகிவிட்டது....

ஆனால் பொதுமக்களுக்கு எத்தகைய மாஸ்க் அணிவது பாதுகாப்பானது என்பதில் தெளிவான வழிகாட்டுதல் அவசியம்....
ஏனென்றால் தள்ளுவண்டிகளில் கூட... காய்கறி பழங்களோடு பக்கவாட்டில் ஒரு கம்பியில் துணி மாஸ்க்குகள் தொங்கவிடப்பட்டு வீதி வீதியாக விற்பனைக்கு வருகிறது... விபரம் அறியா மக்கள் அதை வாங்கத்தான் செய்கிறார்கள் ... அப்படிப்பட்ட மாஸ்க்குகள் அணிந்திருப்பவர் இரும்பினாலோ தும்பினாலோ... அதுலிருந்து வெளியேறும் கிருமிகள் மற்றுவருக்கு பரவாமல் தடுக்கப்படும்...ஆனால் வெளியிலிருந்து வரும் கிருமிகளை அதை தடுக்காது..... அதை அணிபவருக்கு அது தொற்றிலிருந்து பாதுகாப்புத் தராது....

ஒன்று மருந்தகங்களில் பதினைந்து ரூபாய்க்கு கிடைக்கும் சர்ஜிகல் மாஸ்க் வாங்கி ஒருநாளைக்கு பயன்படுத்திவிட்டு டிஸ்போஸ் செய்துவிடலாம்...
அல்லது N95 மாஸ்க் வாங்கி பயன்படுத்தலாம்... இவை இரண்டும் மிகவும் பாதுகாப்பானவை.... நம்மிலிருந்தும் தொற்று பிறருக்கு பரவாது... வெளியிலிருந்தும் தொற்று கிருமிகள் நம் சுவாசத்துடன் கலவாது....
ஆனால் இப்போது பல பிரபல நிறுவனங்கள் மூன்றடுக்கு துணி மாஸ்க் தயாரித்து ...அவை வெளிச் சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளன..... அதை பார்த்து தேர்ந்தெடுத்து உங்கள் சுவாசத்திற்கு அவை இடையூராக இல்லாமல் இருக்கும் பட்சத்தில் வாங்கி பயன்படுத்தலாம் ....
வயதானவர்கள் மற்றும் சுவாசமண்டலம் சம்பந்தமான நோயால் அவதிப்படுபவர்கள் ஃபேஸ் ஷீல்டு பயன்படுத்துவது சாலச் சிறந்தது...... மிகவும் பாதுகாப்பானது....

எழுதியவர் : வை.அமுதா (9-Jul-20, 1:19 pm)
பார்வை : 76

மேலே