சுற்றுச் சூழல்

சாகாத புகழ் உடனேந்தி ஓடியது
கங்கை நதி ஓர் காலம்.
வேகாத பிணங்கள் தோளேந்தி
மாசானது தற்காலம்.
ஆற்றை புதைகுழியாக்கி மேல்நரகம்
தவிர்த்து விட்டோம்
அரும் சூழல் அசுத்தமாக்கி கீழ்நரகம்
அமைத்து விட்டோம்.
அசுத்தம் அகற்றி
அழகான இடமாக்க
நன்மையறிந்து நான்,
நாளும் சொல்வேன்,
நிறைய மரங்கள் நிறுத்திடு.
குறையா நன்மைகள் குவித்திடு.
என் உயிர் காக்கும் வாயுவை,
தன் உயிர் மாயுமட்டும்,
ஒரு தரு, தவறாது தரும்.

ஒரு மரமா
சா
ய்
கி

து
.....அங்கே?
இல்லை.
ஒரு மனிதன் சாகிறான்.

நடவேண்டும் நாற்றுகள்
நாடெல்லாம்.
நட்டவனுக்கு நட்டமில்லை,
நட்டவனால் நடாதவனுக்கும்
நட்டமில்லை.
நடாதவனும் நட்டால்,
நாட்டுக்கே நட்டமில்லை.

நிழல் தரும் மரங்கள் நிறைய நட்டு,
சூழலை சோலையாக மாற்றுவோம்.

வாழ்க்கையில் திருமணங்கள்
சொர்க்கத்தில் நிச்சயமாகட்டும்.
வாழும் இடம் சொர்க்கமா? நரகமா?
பூமியில் நிச்சயமாகட்டும்.

ச.தீபன்.
94435 51706.

எழுதியவர் : தீபன் (13-Jul-20, 11:52 am)
சேர்த்தது : Deepan
பார்வை : 122

மேலே