கொறிக்கலாம் வா

கொறிக்கலாம் வா

கொறிக்கலாம் வா
உன் காதல் பார்வையை நானும்
என் காதல் பார்வையை நீயும்

பல்சுவை கொடுக்கும் இது
உன் பார்வை எனக்கு மட்டும்
என் பார்வை உனக்கு கிட்டும்

வலைக்குள் சிக்கிய மீனாய்
நான் துடித்துக் கொண்டிருக்கிறேன்
தலைக்குள் சுற்றும் நீயோ
எனை ரசித்துக் கொண்டிருக்கிறாய்

காதல் கடலில் மூழ்கியது நான்
காதல் வலையை வீசியது நீ
அதுதான் பிடித்து விட்டாயே
கூடவே அழைத்துச் செல்லேன்

உன் செல்லப்பேச்சு கேட்க‌
தவமும் ஏதும் செய்யலையே!
உன் கூட நானும் வாழ
வரமும் யாரும் கொடுக்கலையே!

அ.வேளாங்கண்ணி

எழுதியவர் : அ.வேளாங்கண்ணி (14-Jul-20, 7:16 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 73

மேலே