காதலித்துப்பார்

அந்தி நேரத்தூரல்...
ஆதவன் மறைக்காத சாரல்....

கருவண்ண மேகத்திடையே
கண்பரிக்கும் வண்ணத்தில்....
கண்ணனின் வில்லாய். ..
காட்சி கொடுத்திடும்
வானவில் தான் காதல்...
இந்த வானவில் கலையாமல்
காலத்திற்கும் கனவுகளை
அள்ளித்தருவது.....!
இந்த வானவில்லின் வண்ணங்கள்
மெளனத்திற்கும் உரையெழுதும்
உயிர்ப்புடையது.....!
காதலித்துப்பார். ...
கையெழுத்து மட்டுமல்ல...
வாழ்வும் அழகாகும்....!

எழுதியவர் : Renu (14-Jul-20, 7:07 am)
சேர்த்தது : renu
Tanglish : kathalithuppar
பார்வை : 152

மேலே