நீயில்லா நிமிடங்கள்

நீயில்லா இரவுகள்
நீழும் வெறுமையாய்....

இருளை அறுவடை செய்யும்
கதிரவனே...
இறுதித் துளியும் மிச்சமின்றி
களைந்து விடு வேருடன்....

நொடிகள்
நிமிடங்களைத்துரத்தினாலும்...,
நிமிடங்கள் நிதானமாய்-
நித்திரையில் உள்ளது...

நீரில்லா நிலமாய்
நெஞ்சம் வெடிக்கிறது...
நீயில்லாத்தனிமையில்....

கதிரவனை கரையேறி..
சீக்கிரம் உதிக்கச்சொல்....
காற்றிலும் அவள் பெயர்
ஒலிக்கச்சொல்....

நீழும் பகற்பொழுது-
நீண்டுகொண்டே இருக்கட்டும்...
என்னவள் என்னைச்சேரும் வரையினில்.....!

எழுதியவர் : Renu (14-Jul-20, 7:39 am)
சேர்த்தது : renu
Tanglish : neeyilla nimidangal
பார்வை : 311

மேலே