அன்று முதல் இன்று வரை ஊரடங்கு நாட்கள் - சி எம் ஜேசு
அன்று முதல் இன்று வரை ஊரடங்கு நாட்கள்
------------------- கொரோனா கவி -------------------------
ஊகானில் பற்றி
பூதமாய் சுற்றி
உலகெங்கும் தொற்றி - மனித
உயிர்கள் பறித்த கொரோனா
காரணங்கள் கண்டா போது - இரத்த
காட்சி நிறைந்த சந்தையில் வாங்கி உண்ட
வவ்வாலினால் வந்த வைரல் கொரோனா
கரம் பதிந்து மூச்சினில் நுழைந்து
சுவாசம் கெடுத்து - தொண்டைக் குழியே
வீடென அமர்ந்த கொரோனா
எத்தனை வைரஸ் நோய்கள் இருந்தாலும்
அத்தனைக்கும் எத்தனாய் உலகை
அலகையாய் சுழல விட்ட கொரோனா
குணமடையா எண்ணமாகி
மருந்தில்லா வண்ணமாகி சீனாவின் பலிஎனும்
உலக பரிசாகி மாய போர் ஆயுதமாய் வெறுப்பாகி
சீன நாட்டின் தோழமையினை
அற்றுப்போக செய்த கொரோனா
கைகள் அலம்ப செய்து முகங்கள் மூட வைத்து
மனங்களை கலங்கச்செய்து மக்களை விலக வைத்து
தள்ளி தனித்திருக்க வாய்த்த கொரோனா
முதியோர்களின் சுவாசம் அறிந்து
நம்பிக்கையற்றவர்களிடம் தங்கி
கூட்டமும் வாட்டமும் உள்ளவர்களென யாவரையும்
தொட்டு வெற்றுடலாக்கிய கொரோனா
ஊரடங்கை அறிவித்து
தடங்கல்கள் தந்து ரெயில் பஸ்களை நிறுத்தி
பள்ளிக்கூடங்கள் மூடி இடநெருக்கடியால் அவைகளை
மருத்துவமனைகளாக்கிய கொரோனா
மக்களின் பொருளாதாரத்தை அற்றச்செய்து
தொழிலாளர்களை ஊர்கள் விட்டு ஓட செய்து
அல்லல்கள் இன்னல்களோடு பட்டினிகளை
பரவச் செய்த கொரோனா
அலோபதி கப சுரகுடிநீர் சுடுதண்ணீர்
உப்பு மிளகு இஞ்சி எலுமிச்சை எனும்
இயற்க்கை பானங்களை பழக்கி மானிடரை
நோயற்ற உடலாக மாறவைத்த கொரோனா
ரோட்டில் ஓடிய கூட்டமெல்லாம்
ஓட்டமில்லாமல் வாட்டமாகி வீட்டிலே
இணைந்திருக்க உள்ளமர்த்திய கொரோனா
எதுவும் இல்லா ரோடாக எல்லோரையும் வீடாக்கி
இயக்கம் மறக்க வைத்து சுறுசுறுப்பில்லா
சோம்பலை சாம்பலாக்கி நெற்றி பூசிய கொரோனா
குழந்தைகளின் வெளியுலகம் மறைத்து
பரிட்சையில்லா தேர்ச்சியாக்கி பள்ளிக்கூடம் மறக்க
டிவி டாப்பூ செல்போன் என பொழுதெல்லாம் போக்கிட
வீட்டையே உலகமாக்க வைத்த கொரோனா
இடிகள் விழுந்தைதைப்போல
இதழ்கள் உதிர்ந்ததை[போல
உலகின் நாடுகளிலே முதிர்ந்த மக்களை
நோயினால் நிம்மதி இழக்க செய்த கொரோனா
எல்லாமும் கைபேசியாகி
வலைதளத்தின் ஆப்புகளுக்குள் வாழ்வை நுழைத்து
மக்களை கடற்க்கரை பூங்கா சினிமா விளையாட்டுக்கள்
விடுதிகள் என எங்கும் புகா வண்ணம் வைத்த கொரோனா
காற்றுக்கு இடைவெளி தந்து
காட்டுக்குள்ளிருந்தவைகளுக்கு சுதந்திரமும்
வீட்டுக்குள்ளிருந்தவர்களுக்கு சிறையும் தந்த கொரோனா
ஆலயங்களை மூடி தர்காக்களுக்கு திரையிட்டு
ஆன்மீக உள்ளங்களுக்கு ஊறுவிளைத்து
கலசங்களைக் காணாது நடைநின்று வணங்காது
கோயில் உயரங்களைக்காணாது செய்த கொரோனா
காற்று தண்ணீர் தேணீரென
மருந்து மளிகை மட்டும் தானென கணீரென
உலகில் ஒரே குரலாகி மற்றயவைகள்யாவும் சீலிட
கதவடைக்க வைத்தக் கொரோனா
அகத்திற்கு பயம் தந்து
யுகத்திலே நோய் மூடு உன் வாயென
முக கவசமும் கையுறைகளையும் அணிய செய்து
புதுவித கவசங்களுக்குள் மனிதரை
வீதி உலா வரவைத்த கொரோனா
தொழில் பாதிப்பு தொடர் வருமான இழப்பு
வெளித்தெரியா கடனென தொடர் சோதனைகள்
அரசு தொகை அதன் அங்காடி பொருளென
ஆறுதலுக்கு கடுகென செலவில்லா வாழ்வு தந்த கொரோனா
எல்லாம் தளர்வாகி எதுவும் இல்லா நிலையாக
உலகம் மாற வேண்டிய தருணம் உடனடி தேவையாகிறது
இல்லை என்று சொல்லாமல் இயன்றதை தரும்
மனங்கள் ரணமாக்கா இறைநிலை அதிகம் வேண்டும்
பிரச்சனைகள் உலகில் ஏராளம் மக்களுக்கு
பிரம்பில்லா பாதுகாப்பு இனி வேண்டும்
நோய்கள் இனி உலகில் தாராளம் மக்களுக்கு
விலையற்ற மருந்து மாத்திரைகள் என்றும் வேண்டும்
அஞ்சா நெஞ்சங்களாகி அன்பும் அறிவும் ஆன்மீகமும் என
தன்னம்பிக்கைகளோடு இத்தரைதனிலே நின்று மிரட்டும்
கொரோனாவை அகற்றுவோம் வெகு சீக்கிரம்
தொடர் நல்லொழுக்க நடவடிக்கைகளாலே
ஆண்டவன் அடிபணிந்து அனுதினம் தொழுது
என் பிரச்சனைகளையும் உலகின் பிரச்சனைகளையும் தீர்க்க
இடைவிடா கீர்த்தனங்களால் இசையஞ்சலியாகிறேன்
என்றென்றும் உங்களின் தோழன் ;
சி ,எம் ,ஜேசு பிரகாஷ்