அன்பு மழலைக்கு பால் சோறு 555

அன்பு மகனே...
முல்லை மலராய் நீ
பிறந்த சில மாதங்களில்...
உன் அன்னை உனக்கு
பால்சோறு ஊட்டினாள்...
உன் குட்டி வயிறு
நிறைந்ததா என் மகனே...
நீ முதல்
அகவை கடந்ததும்...
இன்று நீயாக
அள்ளி
அள்ளி
உண்ணுகிறாய்...
முகத்தில்
அளவில்லா
புன்னகையுடன்...
புன்னகையுடன்...
இன்றுதான் உன் குட்டி வயிறு
நிரம்பியதாக உணர்கிறேன்...
வலது கையால்தான்
எடுத்து
உன்ன வேண்டுமென்று...
உன்ன வேண்டுமென்று...
உனக்கு சொல்லி
கொடுத்தது யார்...
நீ மிச்சம் வைத்த பருக்கைகளை
நான் எடுத்து உண்ணும்போது...
சில பருக்கையிலே என் வயிறும்
மனமும் நிறைந்ததடா...
உனக்கு நானும் எனக்கு நீயும்
ஊட்டிவிட வேண்டும் நாளை...
என் அன்பு மகனே.....