வயல்வெளி
பாதை முட்ட முத்து மணி,
பவளங்கள் கொட்டியிருக்க,
பழங்களில் தேன் சொட்டும்
பல மரங்கள் நிறைந்திருக்க,
வரப்பில் வெண் சங்குகள்,
நிரப்பியதன் வெண்மை பொங்க,
ஓங்கி அசையும் மரத்தின் கூட்டம்,
அங்கே ஓசையற்ற காற்று வீசும்.
பெருகி முட்டும் கரும்புக் காடு,
பெருக்கி வைத்த கரும்புச் சாறை,
முட்ட முட்ட பொங்கிச் சொரிந்து,
சொட்ட சொட்ட நீரில் கலந்து,
ஓடும் வாய்க்கால் தேனானது.
வாய்க்குள் ஓடும் அமிர்தானது.
மஞ்சள் மெத்தை வைக்கோலில்,
கொஞ்சும் பறவைகள் கூடியிருக்க,
வாய்க்கால் நீரில் வைரக்கற்கள்,
வகை வகையாய் ஒளிபரப்பும்.
பாதையில் வண்ண மயில்கள்,
பாதங்கள் ஆடி களித்திருக்கும்.
நுனியில் பனி நிற்கும்
பசும் புல்லை,
தீனிக்கு வந்த பசுக்கள்
புசித்து பசியாறும்.
உணவு தேடி வந்த பசுக் கூட்டம்,
ஊரில் விட்ட கன்றின் நினைவால்,
ஊறி நின்ற பால் சொரிந்து ஒழுக,
கழனியில் பாய்ந்த பால் உறிஞ்சி,
கதிர் முற்றி, கவிழ்ந்தது செந்நெல்.
ச.தீபன்.
நங்கநல்லூர்.
94435 51706.