கவிழ்ந்த வண்ணக் குடை மீது தன் செவ்விதழால் முத்தமிட்டாள்

இது மழைக்காலம்
வண்ணங்களில் வெவ்வேறு நிறங்களில்
பூத்துச் சிரிக்கின்றன மாரிக்காலப் பூக்கள் காளான்கள்
சேற்றில் மலர்ந்த தாமரையை போற்றும் மனிதன்
மழையில் நனைந்து காற்றில் கவிதையாய் மலர்ந்த காளானை
போற்றமாட்டான் ! ஏனோ ?
இவள் வந்தாள்
ஒரு வண்ணக் காளானை ரோஜா போல் கொடுத்தேன்
இதற்கு என்ன பெயர் என்று கேட்டாள்
உன் பெயரையே வைக்கலாமே என்றேன் சற்று துணிச்சலுடன்
ஆம் வைக்கலாமே ...இந்த வண்ணக் காளான் மிக அழகாகவே இருக்கிறது என்று
கவிழ்ந்த வண்ணக் குடை மீது தன் செவ்விதழால் முத்தமிட்டாள்
இவள் ஒரு இயற்கை அபிமானியோ ?