அன்புள்ள மகனுக்கு

பக்குவமாய் வெந்நீர் வைத்து
பாதத்தில் உயிரை வைத்து
மூக்கு நெத்தி வகுடி எடுத்து
முழுசா உன்னை வருடையிலே
பிஞ்சு தேகம் நெஞ்சம் தொட்டு
பொக்கை வாய் சிரிப்பு மயக்குதடா,,
உன்னை மார்பில் போட்டு தாலாட்டி
நீ முகம் சுளித்தால் சீராட்டி
உன்னை அழகு படுத்தி பாராட்டி
நீ பார்ப்பதெல்லாம் நானும் பார்த்து
நீ கேட்பதெல்லாம் நானும் கேட்டு
நீ அழுகையில் நானும் தவித்து
கண்ணே என் கண்ணெல்லாம்
உறங்கையிலும் உன்மீதே,,
மகனே நான் காலில் ஏந்தி நீராட்ட
பாசமில்லை என நினைப்பாயோ,,
சோப்பு நுரை கண் நனைத்தால்
நான் கொடுமை காரி என நினைப்பாயோ,,
தடுப்பூசி போட சென்றால்
கல் நெஞ்சம் என நினைப்பாயோ,,
உண்மை நீ உணர்கையிலே
நான் கிழவி ஆகி போவேன்
இருப்பினும் கவலை என்ன
என் பேத்தியை பார்த்துக்கொள்,,
உண்மை நீ உணர்கையிலே
நான் கிழவி ஆகி போவேன்
இருப்பினும் கவலை என்ன
என் பேத்தியை பார்த்துக்கொள்,,