மிஞ்சும் அழகு💃
மிஞ்சும் அழகு💃
நிலவை விட அவள் பொலிவு.
மலரை விட அவள் தேகம் வாசம்.
தேனை விட அவள் இதழ்கள் சுவை.
கடலை விட அவள் மனம் ஆழம்.
அம்பை விட அவள் விழிகள் கூர்மை.
கள்ளை விட அவள் பார்வை மயக்கும்.
கொடியை விட அவள் இடை மெல்லியது.
இசையை விட அவள் குரல் இனிமை.
தென்றல் விட அவள் வரவு ஆனந்தம்.
நடனத்தை விட அவள் நடை நலினம். பொன்னகை விட அவள் புன்னகை அழகு.
நெற்கதிரை விட அவள் நாணம் கொள்ளை அழகு.
கீழ்வானத்தை விட அவள் வெட்கம் சிவப்பு.
பஞ்சனையை விட அவள் நெஞ்சனை சொர்க்கம்.
- பாலு.