முகநூல் பதிவு 39

நட்புகள் அனைவருக்கும் இனிய ஞாயிறு வணக்கம்!
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

நம் பிள்ளைகளுக்கு வணக்கம் சொல்லக் கற்றுத்தருவோம்!

முன்பெல்லாம் வீட்டிற்கு விருந்தினர்களோ உறவுக்காரர்களோ வயதில் பெரியவர்களோ வந்தால் வரவேற்று வணங்கும் பழக்கத்தை பெற்றோர் தம் பிள்ளைகளுக்கு தவறாமல் கற்றுத் தந்தனர்.
கிரிஸ்தவர்கள் வீடுகளில் ஸ்தோத்திரம் என்று சொல்லக் கற்றுத்தந்தார்கள்....
இஸ்லாமியர்கள் இல்லங்களில் சலாம் அலேக்கும் என்று சொல்வது மதம் சார்ந்த நல்லதொரு வழக்கம்...
பிராமணர்கள் வீடுகளில் நமஸ்காரம் என்று வணங்கும் பழக்கம் இன்றுவரை நடைமுறையில் உள்ளது...
ஆனால் இந்தச் சொற்கள் எல்லாம் மரியாதைக்குரிய நல்ல உயரிசொற்கள்தான் என்றாலும் ஒரு குறிப்பிட்ட மதம் இனம் என்ற வட்டத்திற்குள் அடங்கிவிடுகின்றன....
ஆனால் “வணக்கம்” என்றச் சொல் நம் தமிழர்கள் பண்பாட்டின் மகத்துவம்.....
தமிழ் நாகரீகத்தின் உன்னத அடையாளம் ....
நம்மைவிட பெரியவர்களையோ அல்லது அறிமுகம் இல்லா மனிதரை முதல் முதலாய் நேரில் சந்திக்க நேர்கையில் நெஞ்சுக்கு நேராய் இருகரம் கூப்பி “வணக்கம் “ என்று சொல்லிப் பாருங்கள் .... உங்களுக்கும் அவர்களுக்கும் நல்லதொரு இணக்கம் ஏற்பட அது தொடக்கமாய் அமையும்.....
ஒருவேளை முன்பாக உங்களைப்பற்றி அவர்கள் எதிர்மறையான சிந்தனை கொண்டவர்களாக இருந்தால்கூட... நேருக்கு நேராய் அவர்கள் கண்களை சந்தித்து சிறு புன்னகையுடன் சொல்லப்படும் வணக்கம்.... அவர்கள் உள்ளத்தில் நிச்சயம் நல்லதொரு தாக்கத்தை ஏற்படுத்தும்..... உங்களைப்பற்றிய எதிர்மறை எண்ணம் குறைந்து... நட்பில் புதியதொரு அத்தியாயம் எழுதப்படும் ...,
ஹாய்,பாய் எல்லாம் உதட்டோடு மறையும் சொற்கள் ... கூடுமானவரை அவற்றை தவிர்க்கலாம் .....

வணக்கம் சொல்லப் பழகுவோம்
தமிழனின் தலைசிறந்த நாகரீகத்தை
உலகமக்களுக்கு உணர்த்துவோம்!

எச்சரிக்கை: கட்டி அணைத்தலும், கை குலுக்கலும் கொரோனா தொற்ற வழிவகுக்கும்.

🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐

எழுதியவர் : வை.அமுதா (19-Jul-20, 8:12 pm)
பார்வை : 53

மேலே