ஐக்கூ கவிதை
🧸🧸🧸🧸🧸🧸🧸🧸🧸🧸🧸
*குறுங்கவிதை*
படைப்பு; *கவிதை ரசிகன்*
🧸🧸🧸🧸🧸🧸🧸🧸🧸🧸🧸
தெருக்கள் தோறும்
சுத்தமாக இருக்கிறது
குப்பைத் தொட்டி
🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀
பாதையில் புதிய தம்பதி
மறையும் வரை பார்க்கிறாள்
முதிர் கன்னி
🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀
ஆபாசம்
குடும்பத்தோடு பார்க்கின்றனர்
தொலைக்காட்சியில்
🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀
அவர் தவறாமல்
கோவிலுக்குச் செல்வார்
கஷ்டம் வந்தால்
🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀
குழந்தையின் அழுகை
அனைவருக்கும் சப்தம்
அன்னைக்கு மொழி
*கவிதை ரசிகன்*
🧸🧸🧸🧸🧸🧸🧸🧸🧸🧸🧸