பாகம் 4 யார் உன்னை கொன்றது
விஜய் வீட்டின் கதவு தட்டப்பட்டதும்........!
அன்று நடந்ததை அனைத்தும் அந்த டைரியில் எழுதியவன், யவரும் பார்த்திடாமல் இருக்க, தன் படுக்கையின் மெத்தைக்கு அடியில் வைத்தான்.
(இதுவரை நடந்ததில் அவனுக்கு அவள் எவ்வாறு கொல்லபடுவாள் என விளங்கியது, ஆனால் யாரால் என்பதற்கு சற்றும் தடயம் கிடைக்கவில்லை)
பயத்தில் அவனை கண்ட பிரியாவை பார்த்து மெல்லிய புன்னகை உதிர்த்து,
I love you பிரியா, என மறைந்தான்.
சரியாக அன்றைய தினத்தின் 8:30 மணிக்கு அந்த ஒற்றையடி பாதைக்கு சென்றிருந்தான்.
அங்கே பிரியா, அவனுக்காக காத்திருக்க, அவளைக் கண்டு அதே மெல்லிய புன்னகை உதிர்த்து அவன் விரல்களை அவள் விரல்களுடன் கோர்த்து நடந்து சென்றான்
அவளை மோதுவதற்கான கார் வருவதற்குள், அவளை அருகிலிருக்கும் தோட்டத்தின் வழியாக அழைத்து சென்றான்.
அவர்கள் தோட்டத்திற்குள் செல்வதும் அந்த காரானது அந்த சாலையின் வழியே வருவதும், ஒரு சேர அமைந்தது.
பிரியாவின் கையை பிடித்தப்படி நடந்தவன், திரும்பி அந்த காரின் நம்பர் பிளேட்டை கவனித்தான்
அதில் New Registration என்று வெள்ளை தாளில் ஒட்டப்பட்டிருந்தது.
பிரியா, அவனுடன் நடந்துக்கொண்ட என்ன டா? பார்கிற.... என்றாள்
ஒன்னுமில்லையே!!!!! என்று அவளுடன் நடந்த படியே...........
அந்த கார் செமயா இருக்குது ல என்றான்.
அவளும் அவனது பார்வைக்கு ஏதுவாக திரும்பி அந்த காரை கண்டவள், ஏய் இது குமார் அப்பாவோட Office கார் மாதிரி இருக்குதே?????? என்று சிறிது யோசித்தவள்.......
இல்லை டா!!!!! New Registration என்று போட்டு இருக்கு,
வேற யாரோட காரோ! என அவன் தோளோடு நடந்த படியே சாய்ந்தாள்.
அவள், அவளது அம்மாவின் இரண்டாவது கணவரின் பெயரை சொன்னதும், அவன் அதிர்சியில் எதையோ யோசித்தான்.... அவள் இல்லை என்றதும் சிறிது எதர்ச்சையாக மாறினான்.
பள்ளியை அடைய, இன்னும் ஐந்து நிமிடம் என்ற தருவாயில், அவள் அவனிடம் Chemistry Examக்கு காண்பிக்குமாறு கேட்டாள்.
அவனும் சரி ஆனால் எனக்கு ஒன்னு தரனுமே என்றான்.
என்ன வேணும் என்றபடி அவனை,
அவள் கண்டாள்.
சற்றே அவன் அவளை பார்த்து சிரித்தப்படி, காதலோடு ஒரு கிஸ் வேணும் என்றான்.
சற்று காதலோடு முறைத்தவள், அப்போ எனக்கு நீ காண்பிக்கவே வேணாம்! என கலகலவென சிரித்தாள்.
அவன், அவனின் இதயத்திற்கு பிடித்தமானவளின் சிரிப்பை மெய் மறந்து கண்டான்.
வகுப்பை அடைந்ததும் தேர்வு ஆரம்பிக்கப்பட்டது, அவளுக்கு காண்பிப்பதற்கு ஏதுவாக.........! அவள் அமர்ந்திருந்த பெஞ்சின் அருகில் தரையில் அமர்ந்தான்.
அவள் தேர்வை எழுத பேக்கில் பெனாவை தேடினாள்.
அவளுக்கு பேனா கிடைத்திருக்கவில்லை, பிரியாவுடன் விஜய் நடந்து வரும்போதே, அந்த பேனாவை அவளுக்கு தெரியாமல் எடுத்திருந்தான்.
பேனா இல்லாமல் வகுப்பில் அவள் திருட்டு முழி முழிக்க, அவளுக்காய் அவன் எடுத்து வந்த பேனாவை கோடுத்தான்.
தேர்வில் அவனை கண்டு! அனைத்து கேள்விக்கும் பதில் எழுதிய மகிழ்ச்சியில் அவள் அவனிடம் பேசிக்கொண்டிருக்க, அவன்எனக்கு ஒரு Help பண்றியா? பிரியா என்றான்.
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் என்று என்னவென அவள் கண்களால் வினாவினாள்.
21.10.2011 இந்த Dateக்கும் உனக்கும் ஏதும் சம்மந்தம் இருக்கா? என்றான்.
டேய், அன்றைக்கு தான!
நாம லவ் பண்ண! Start பண்ணோம் என்றாள்.
அது இல்லை,.............
அதை தவிர................
ஏதும் சம்பந்தம் இருக்கா?
என்ன சம்மந்தம்..... என காதலோடு அவனை கண்டு......
புரியல டா என்றாள்.
எப்படி விளக்குவது என்று தெரியாமல்
ஒன்னுமில்லை விடு என்றான்.
அவளும் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ஏதோ மறைக்கிற!!!!
அவன் மெல்லிய புன்னகையில் இல்லையே என்றான்.
பள்ளியானது முடிந்தது.......!
இருவரும் கைகோர்த்தப்படி நடந்து சென்றுக்கூண்டிருக்க, விஜய் மனதில் அடுத்து இவள் எவ்வாறு இறக்க போகிறாள் என குழபத்தோடும்!
அதே நேரத்தில் எதுவாய் இருந்தாலும் பார்த்துகலாம் என்ற தன்னம்பிக்கையோடு அவளுடன் நடந்து கொண்டிருந்தான்.
அவள், என்னடா! எதுவுமே பேசாமல் வர........ என்றாள்
அப்படில எதுவும் இல்லை டி, என
அவனின் இடதுபுறம் நடந்து வந்தவளை முகத்தை பார்க்க....... அந்த புறத்தின் ஓரத்தில் அமைந்திருந்த வீட்டில் CCTV கேமிரா இருப்பதை கண்டான்.
இதற்குமுன் எத்தனையோ முறை இந்த சாலையில் வந்திருக்கிறான், இந்தமுறைதான் அந்த CCTVயை பார்க்கிறான்.
அதற்கான கட்டாயமும் தேவையும் இப்போது இருந்தது கூட ஒரு காரணம் ஆகலாம்.
அதுவரை யார் அவளை கொல்ல முயர்சிப்பது என்ற குழப்பமான மனநிலையில் வந்தவன், அந்த CCTVயை பார்த்ததும் சற்று சுறுசுறுப்பானான், அந்த சாலையின் இரு புறத்திலும் வேறேதும் வீட்டில் CCTV கேமிரா இருக்கிறதா? என பார்த்துக்கொண்டே வந்தான்.
தன்னிடம் எதுவுமே பேசமல் வருவதைக் கண்ட, பிரியா...... அவளே பேச தொடங்கினாள்.
அவள்: காலைல ஏன் அப்படி கேட்ட
அவன் புரியாமல் என்ன கேட்டே....ன்
21.10.2011 க்கும் எனக்கும் சம்பந்தம் இருக்கானு?
நீ கேட்டல என்றாள்
அது ஒன்னுமில்லை, விடு...........
ஏதோ இருக்கு, என்கிட்ட சொல்ல மாட்ற.......
Surprise ஏதும் வச்சிருக்கியா?
என கொஞ்சுவதை போல் அவனை பார்த்தாள்.
ஆனால் அவன் கவனம் சாலையின் இருப்புறமும் இருந்த வீட்டின் மேல் இருந்தது.
டேய் என்ன டா! பேசவே மாட்ர..... என அவன் கையை பிடித்து அங்கேயே நின்றாள்.
சரி சொல்லு என்ன பேசனும் என்றான்.
என்ன பேசனுமா??????? ஒரு நொடி யோசித்து
ஒரு கதை சொல்லு பார்போம் என்றாள்
கதையா!!!!!!!! (இந்த முறையும் அவனது கவனம் அருகில் எந்த வீட்டிலாவது CCTV கேமிரா இருக்கிறதா என்பதிலேயே தான் இருந்தது)
அவளை சம்மாளிப்பதற்காக!!!!!!!!!
சரி சொல்றேன்!
கேளு...... என்றான்
ம்ம்ம்ம்ம்ம்ம் சொல்லு.......!
அவன் ஆரம்பித்தான்.............
ஒரு அழகான ஊர்ல.........!
ஒரு அழகான இராஜ குமாரி இருந்தாளாம்..........!
அவள் கண்ணு ரொம்ப அழகா இருக்குமாம்............!
(சற்று பிரியாவின் முகத்தில் மெல்லிய புன்னகை பூத்தது......)
சரி சரி அப்புறம் என்றாள்
அந்த இராஜ குமாரியும் அதே ஊர்ல இருக்கிற மந்திரவாதியும், தங்களோட காதலை சொல்லாமல் ஒருத்தரை ஒருத்தர் நேசிச்சிட்டே வந்தாங்க.........!
மந்திரவாதியா!!!!!!!!!!!!!
ம்ம்ம்ம்ம்ம்ம்ம், என்றாள் பிரியா
சரியா, ஒரு நாள் அந்த மந்திரவாதி.........!
இராஜகுமாரி கிட்ட காதலை சொன்னதும் அந்த நொடியே.....! இராஜகுமாரி அங்கேயே இறந்து போகிறாள்..........!
இதுவரை, அவர்களது காதல் கதையென கேட்டு வந்தவள்....... ஒரு கணம் முகத்தை அவன் புறம் திருப்பி.........! பதற்றத்தோடு அப்புறம் என்ன ஆயிற்று என்றாள்
அவன் தான் மந்திரவாதி ஆயிற்றே, அவளுக்கு உயிரை கொடுத்துவிட்டான்.
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம், அப்புறம்
திரும்பவும், அடுத்தநாள் வேறோரு இடத்துல வைத்து அவன் கண்ணு முன்னாடியே, கொலை பண்றாங்க!.....
அவனும் அவளுக்கு உயிர் கொடுத்துட்டே இருக்கான்......!
கொடுக்க
கொடுக்க
ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதமா? கொலைபண்ணிட்டு தான் இருக்காங்க,
யாருக்கும் தெரியாம, பக்காவா! பிளான் பண்ணி அவளை கொல்ல பாக்குறாங்க!!!!
மந்திரவாதியும் உயிர் கொடுத்துட்டே தான் இருக்கான் என்று நிறுத்திவிட்டு,
யார் அவளை கொல்ல பாக்குறது? என கேள்வியோடு அவளை பார்த்தான்.
சற்று எதுவும் பேசாமல் விஜயோடு இரண்டடி நடந்தவள் அவனிடம்,
ஏன்......! அந்த மந்திரவாதி அவளை கொலை செய்திருக்க கூடாது......!
அவனே, அவளை கொன்ற பிறகு
உயிர் கொடுத்திருக்கலாமே.....!
இராஜகுமாரி கிட்ட நல்ல பேரு வாங்க! இப்படி பண்ணி இருக்கலாம் என்றாள்
அப்படி, நல்ல பேரு வாங்க அவன் நினைத்தால்......
ஒரு தடவை உயிர் கோடுத்ததோட முடிஞ்சி இருக்கும் ல!
பிரியா என்றான்
அட ஆமல........... என சிறிது யோசித்தவள்,
ஏதும் குல்ளு இருந்தா கொடேன் என்றாள்
சற்று அமைதியுடன் அவளை கண்டு,
இருக்குற ஒரே குல்ளு இது தான்........!
அந்த மந்திரவாதி என்றைக்கு அவன் காதலை சொன்னானோ! அன்றையில இருந்து தான்! இந்த Problem Start ஆகுது என்றான்.
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் என முனங்கியவள்,
நாமா ஏன்? இப்படி யோசிக்க கூடாது, அந்த Date ல இருந்துதான் அவளை யாரோ கொல்ல பார்க்கிறாங்க!
அதான................................?
ஆமா........!
அவளோட குடும்பத்தில் யாரவது கூட கொல்ல பார்க்கலாமே என்றாள்.....
ஏன் என்பதை போல் பார்த்த விஜயை கண்டு,
அந்த Date ல இருந்துதான் அவள் சாகுரா........!
யாரு ,சாகடிக்குறாங்கனு, கண்டு பிடிக்கவே முடியல........
அப்படினா! அது அவளுக்கு நல்ல தெரிஞ்சவங்களா! தான இருக்கும்......... என நிறுத்தி அவனை கண்டு!
அப்படி கூட ஏதும் இருக்கலாம் ல......
என கல கல கல வென சிரித்தான்
இதுவரை.............! இத்தகைய சிந்தனை அவனுக்கு தோன்றிருக்கவில்லை.....!
விளையாட்டாய் தான் அவளிடம் கதை சொன்னான்........... இந்தமுறை கொஞ்சம் மும்மரமாக!
ஏன்? அப்படி சொல்ற என்றான்.
இத்தனை நாள் அவளை யாரும் கொல்லவில்லை, அந்த நாளுக்கு அப்புறம் தான் அவள் சாகுரா......... அப்படினா?
அவளோட தேவை அவங்களுக்கு இல்லாதது கூட ஒரு காரணமாய் இருக்கலாம்........ இல்லை,
இதுக்கு மேல அவள் இருந்தால் அவங்களுக்கு ஏதும் தொல்லையாக கூட இருக்கலாம்......... சரிதானே என்றாள்.
அவன் : Maybe...............!
சிறிது குழப்பமானான்
இது ஒருபுறம் நடந்துக் கொண்டிருக்க,
குறுக்கே மிதிவண்டியில் விஜய் மற்றும் பிரியாவின் வகுப்பு தோழன் ராஜு குறுக்கே வந்து நின்றான்.
பிரியா அவனிடம், என்ன டா ராஜு என்றாள்.
விஜய் எதுவுமே பேசுவதாய் இல்லை, காரணம் பிரியா சொன்னதை சிந்தித்து கொண்டிருந்தது, அவனது மனமும் மூளையும்
இதற்கிடையில் ராஜு, தனது கையால் விஜயை ஒரு தட்டு தட்டி,
இன்னைக்கு நாம Friends la சேர்ந்து கன்னியாகுமரி பீச்சிக்கு, நைட் போறோம் வரியா என்றான்.
விஜய் சற்று தெளிவில்லாமல்
இல்லை டா........
ஏன் டா, வரல....
இந்த இரண்டு நாளா......
எங்க கூட பேசவே மாட்ர.......
என்ன ஆயிற்று என்றான்.
அதெல்லாம் இல்லை மச்சா, வேலை இருக்கு
என்ன வேலை சொல்லு முதல்ல.........!
இன்னைக்கு நைட் பிரியா வீட்டுக்கு போறேன் .
இது எப்படா, என்பதை போல் பிரியா விஜயை பார்த்தாள்.
இதற்கிடையில் ராஜு கோபமாய், நீ அவளையே கட்டிட்டு திரி............... என கிளம்பினான்.
சிறிது நேர கடப்பில், பிரியா விஜயை பார்த்து ஏன் டா? அவன் கிட்ட பொய் சொன்ன என்றாள்.
நான் பொய் ல சொல்லவில்லை, நிஜமா வரதான் போகிறேன் என்றான்.
சற்று, அதிர்சியில் அவனை பார்த்தவள் கல கல கலவென சிரித்தாள்.
ஏன் டி சிரிக்கிற,
அவள்: நீயாவது வரதாவது
கண்டிப்பா வருவேன் டி.......
வந்ததும், Examku காட்டுனேன் ல அதுக்கு கிஸ் தரனும் என்றான்
வந்தால் தரேன் டா..............
(சற்றும் நம்பிக்கையில்லை)
ம்ம்ம்ம்ம் பார்க்கலாம், என அவன் சொல்வதும்!
அந்த சாலையின் இடது புறத்தில், ஒரு வீட்டில் CCTV கேமிரா இருப்பதை விஜய் பார்ப்பதும் சரியாய் அமைந்தது.
இன்னும் அவர்களது வீடு வருவதற்கு சிறிது தொலைவே இருந்ததால், தனித்தனி தொலைவில் நடக்க ஆரம்பித்திருந்தனர்.
.
.
.
வீட்டை அடைந்ததும்.......
சன்னலில் ஓரத்தில் இருந்த சாவியை எடுத்து வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்றான்.
சென்றவன் பள்ளி உடையை மாற்றினான்.
இன்று நடந்தது அனைத்தையும் அந்த டைரியில் எழுதி அதே இடத்தில் வைத்தான்.
இன்று நடந்ததில் இருந்து அவனுக்கு பிரியாவின் கொலை பற்றி இரண்டு விதமான சிந்தனைகள் தோன்றி இருந்தன.....
ஒன்று அந்த CCTV கேமிரா, மற்றொன்று அவனது கதைக்கான பிரியாவின் பதில்......!
அவள் பதில் சொன்ன முறையில் இதுவரை அவன் சிந்தித்திருக்கவில்லை...........!
தனது வீட்டிலிருந்து கிளம்பி,..................
அவன் தனது சைக்கிளில் அந்த CCTV கேமிராவை முதலில் பார்த்த வீட்டிற்கு சென்றான்.
அங்கே சென்றவன், அந்த வீட்டில் ஒரு நடுத்தர வயது பெண்ணும் ஐந்து வயது சிறுமி இருப்பதையும் பார்த்தான்
அவர்கள் இவனை பார்த்து என்னவென வினாவிட,
இல்லை ஆண்டி, Today Morning 8:30 இருக்கும் !
அப்போதுல இருந்து எங்களோட பைக்க காணும், அதான் உங்க வீட்டுல CCTV கேமிரா இருக்குறத........ பார்த்தேன்!
அதான், யாராவது எடுத்துட்டு போகுறாங்களா? னு அதில் காண்பிக்க முடியுமா ஆண்டி என்று கேட்டான்
தொடரும்.........................