யார் குற்றம்

ஆனந்திக்கு இன்னும் நம்ப முடியவில்லை; தலை சுற்றியது; போன்ல கேட்டது உண்மையா? கண்களிலிருந்து நீர் அருவியாக கொட்டியது; நிற்க முடியவில்லை; கொஞ்ச நேரம் அப்படியே உட்கார்ந்து விட்டாள்; அவளின் நிலை கண்டு சுதா, வேகமாக அவளின் அருகில் ஓடி வந்தாள்;
சுதா, " என்ன ஆனந்தி? " என்ன செய்யுது”?
(ஆனந்தி கையில் இருந்து போன்யை வாங்கி சுதா பேசினாள்; மேடம், மேடம், என்று குரல் கேட்டது; சொல்லுங்க, நான் அவங்க பிரண்ட் தான் பேசறேன்; நாங்க ஸ்கூல் ல இருந்து பேசறோம்; அவங்க பொண்ணு மதுமிதா மருந்து குடிச்சி மயக்கமாயிட்டாள்; அவளை ஆஸ்பத்திரிக்கு கொண்டு போறோம்; அங்க வந்துருங்க; என்றார்கள்; சரிங்க என வைத்து விட்டாள்; )
சுதா, " ஆனந்தி , இந்தா தண்ணி குடி; நம்ம ஆஸ்பத்திரி போகலாம்; இரு நான் லீவு சொல்லிட்டு வந்துடறேன்" என்று மானேஜர் ரூம் க்கு விரைந்தாள்;
(ஆனந்தி அழுகையை நிறுத்தவில்லை; இது யார் குற்றம் என சிந்தித்தவாறு ஆட்டோவில் சுதாவுடன் ஆஸ்பத்திரி நோக்கி சென்றாள்; மனதுக்குள் ஒரு புறம் யோசனை ஓடியது; அவள் கணவனுக்கு போன் செய்ய வேண்டும்; அவள் கணவன் மனோகர்க்கோ மதுமிதா ன்னா உயிர்; அவனிடம் எப்படி சொல்வது?
முதலில் நாம் சென்று மதுவை பார்த்த பின்னர் மனோகர்க்கு போன் செய்யலாம்; )
சுதா, " என்ன ஆனந்தி ? பாப்பாவை வீட்டில் ஏதும் சொன்னீங்களா ?"
ஆனந்தி," எப்போ, சொல்லிருக்கோம்? மூன்று வருடம் கழித்து
பிறந்த பொண்ணு மதுமிதா? நானும் அவரும் அவளை நல்லபடி தான் நடத்துறோம்; உனக்கே தெரியுமே; அவளும் ரொம்ப நல்ல பெண். இது வரை எந்த பிரச்சனைக்கும் போனதில்லை; இப்போ என்ன நடந்ததுன்னு எனக்கு புரியவில்லை ?
சுதா," கவலைப்படாதே , நல்லவர்களை கடவுள் ஒரு போதும் கை விட மாட்டார்; "
ஆஸ்பத்திரி நெருங்கி விட்டார்கள் ;
-----
ராகுல், மிதுன் இருவரும் தோழர்கள்; மிதுன் மீது ராகுலுக்கு அளவுகடந்த அன்பு;



மிதுன்," ராகுல் நீ ஏன் ஸ்கூல் க்கு வரல? உனக்கு விஷயம் தெரியுமா ? பிளஸ்-1 மதுமிதா மருந்து குடிச்சிட்டாளாம்; எதுக்குன்னு தெரியல; போன வாரம் கூட நம்ம கிட்ட எதுத்து பேசுனா இல்ல; அதான் அவளுக்கு கடவுள் தண்டனை கொடுத்திட்டார்;
ராகுல் ( அதிர்ச்சியுடன் ) என்னடா சொல்ற, எனக்கு ரொம்ப பயமாக இருக்குடா ; ஆஸ்பத்திரிக்கு போய் பார்த்துட்டு வருவோமா ?"
மிதுன், " உனக்கு ஏன்டா பயம்? இதுல உனக்கு என்ன பிரச்னை?
உண்மையை சொல்லுடா ; நீ என்ன செய்த ?";
ராகுல்," என்ன மன்னிச்சிருடா ; போன வாரம் அவ பிரண்டை நீ ஏதோ சொல்லிட்டேன்னு உன்னை எல்லோர் முன்னயும் திட்டினாளே; அதுக்கு பழிவாங்க ...(மென்று முழுங்கினான் );
மிதுன், " என்ன செய்ஞ்ச? சொல்லி தொலை";
ராகுல், " டேய் , என்ன அடிச்சுடாத ... அவங்க வீட்டில ...."
மிதுன்," அவங்க வீட்டுல.. என்ன செய்ஞ்ச ?"
ராகுல்," அவளோட பேக்ல எனக்கு தெரிஞ்ச ஒரு பொண்ணு மூலமாக கேமரா வை பிக்ஸ் பண்ணிட்டேன்;" முறைக்காதடா; சும்மா பயமுறுத்தலாம் என்று தான் ….; "
(மிதுனும், ராகுலும் பேசுவதை கேட்டு ராகுலின் அக்கா கோமதி உள்ளே நுழைகிறாள் கோபத்துடன்; இருவரும் திரு திரு வென முழிக்கிறார்கள்)
----
ஆனந்தி, " டாக்டர், என் பொண்ணு எப்படி இருக்கிறாள் ? அவளுக்கு குரல் உடைந்தது;
டாக்டர்," மேடம், உங்க பொண்ணுக்கு பர்ஸ்ட் எயிட் கொடுத்திருக்கிறோம்; ஸ்டொமக் வாஷ் நடக்குது; பயப்பட ஒன்னும் இல்லை; கொஞ்சம் அமைதியாக இருங்கள் ;"
சுதா," குழந்தையை நாங்க பார்க்கலாமா ?" ;
(நர்ஸ் இருவர் பேசுவது காதில் கேட்டது; இந்த வயசுல அதுங்களுக்கு என்ன பிரச்சனையோ உடனே முடிவு எடுத்திருதுங்க;
இரண்டாமவள் இன்னும் அதிகமாக, இவங்களை சொல்லி குற்றமில்லை; இவங்களை கண்டுக்காமல் விடுதுங்க பாரு பெத்துட்டு அதுங்களை சொல்லணும்; )
வார்த்தைகளில் இத்தனை வலி கொடுக்க முடியுமா? என தவித்தாள் ஆனந்தி;

சுதா அவர்களை முறைத்தாள் ;
இருவரும் மதுமிதா அருகில் சென்று பார்த்தார்கள்; அவள் கண் விழிக்கவில்லை;
சுதா, மனோகருக்கு போன் செய்து வர சொன்னாள்;
எங்கு தவறு நடந்தது?
மனோகரின் நண்பன் சுதாகர் உடன் வந்திருந்தான். மனோகர் அவனிடம் புலம்பி தவித்தான்; என்னனு தெரியலையேடா; குழந்தை எதற்கு இப்படி செய்தது? என்று கூட தெரியலையே? என்ன நடந்திருக்கும்? எல்லாவற்றையும் என்னிடம் சொல்லுவாள்; அவளிடம் ஒரு தோழனாக தானே நான் பழகினேன்; அவள் ஏன் இப்படி முடிவெடுத்தாள்? குழப்பத்தில் குமுறினான்;
ஆனந்தியை கை பிடித்த நாள் முதல் இருவருக்குள்ளும் ஒரு சண்டை வந்தததில்லை; இப்போது கூட அவளை திட்டிட கூடாதே என்ற கவனம் அவனிடம் இருந்தது;
அவளை தேற்ற வார்த்தையில்லை இவனிடம்; அவன் கேள்விக்கு பதில்லை அவளிடம்;
மனோகர், ஆனந்தி இருவரும் மதுமிதா முன்னர் நின்றார்கள்; என்ன சொல்ல போகிறாள்?
மதுமிதா கண் விழித்தாள்; சந்தோசமாக அவள் அருகில் சென்றனர்;
ஆனந்தி, " அவளிடம் கேள்வியுமில்லை; பதிலுக்கான அவசியமுமில்லை; மது வையே பார்த்துக் கொண்டிருந்தாள்; மதுவுக்கு புரிந்தது தாயின் வேதனையும், தவிப்பும்; "
மனோகர் ," ஏன் தாயி, என்ன ஆச்சு உனக்கு; எதுக்கு இப்படி செய்திட்ட?"
மதுமிதா," அப்பா , எனக்கு ரொம்ப பயமாக இருந்தது; எனக்கு, என்ன ஆச்சு ? திடீர்ன்னு ராகவி வந்து ராகுல் உன்னிடம் சண்டை போட்டான் இல்ல ன்னு ஏதேதோ சொன்னாள்; அதற்குள் எனக்கு மயக்கம் வந்துவிட்டது; அப்புறம் நடந்தது எதுவும் எனக்கு புரியல;”

-----
கோமதி, " ராகுல் உனக்கு எங்கிருந்து இத்தனை தைரியம் வந்தது?" ; நம்ம வீட்டில் பிறந்துட்டு இந்த குற்றம் செய்யலாமா? என கேட்டு ஓங்கி அறைந்தாள்;
(ராகுல் பொறி கலங்கி கீழே விழுந்தான்; மிதுன் அவனை தூக்கி விட்டான்; அக்கா, அவன் தெரியாமல் செஞ்சுட்டான் அக்கா என்றான்;)
கோமதி," எதுடா? தெரியாமல் செய்றது ? இதுக்கா கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறோம் ?"; உங்க வயசுக்கு கண்ட கண்ட விஷயங்களை பார்க்கிறது; அதுக்கு எதுக்கு அடுத்த வீட்டு பெண்களை கஷ்டப்படுத்தனும்? " அந்த கேமரா வை என் ரூம்லயும், நம்ம அம்மா ரூம்ல, பாட்டி ரூமளன்னு வைச்சுடுங்க" என்றதும் (ராகுல், அக்கா என்னை கொன்னுடு; இப்படி பேசாதே என அவள் காலில் விழுந்தான்; நான் சும்மா பயமுறுத்தலாம் என்று தான் செய்தேன்; அது அவளுக்கு எப்படியோ தெரிஞ்சு இன்று மருந்து குடிச்சிட்டாள் போல என தேம்பி தேம்பி அழுதான்;)
கோமதி, (விஸ்காம் படிக்கிறாள்) அந்த கேமரா எங்கே என்றதும் ... ராகுல் அவளிடம் கொடுத்தான்;
கோமதி தொடர்ந்து பேசினாள்,”தவறு என்பது தெரியாமல் செய்வது; தப்பு என்பது தெரிந்தே செய்வது; இவை இரண்டும் மற்றவர்களை பாதிக்கும் போது அது குற்றம் ஆகிறது; இப்போ நீங்க செய்தது மன்னிக்க முடியாத குற்றம்”;
மெமரி கார்டை கம்ப்யூட்டரில் இணைத்தாள்; திரையில் காட்சிகள் ஓட துவங்கின;
(இன்றைய தலை முறையில் குற்றங்கள் அதிகரிப்பதற்கு யார் பொறுப்பு; பொறுப்பான அடுத்த தலைமுறை வளர்க்க தவறுவது யார் ? ; இன்றைய அரசியலா? இல்லை தனிமனித அற செயல் இன்மையா? அவள் சிந்தனையில் ஓடியது)
காட்சி -1 : ஹால்; ஆனந்தி உள்ளே நுழைகிறாள்; தாத்தாவின் அருகில் சென்று அன்புடன் விசாரிக்கிறாள்; பேசுவது கேட்கிறது; தாத்தா இருங்க, என்று அவள் ரூமுக்கு சென்று வேறு உடையில் திரும்புகிறாள்; எழ முடியாத அவரை உட்காரவைத்து, வெந்நீரால் உடல் துடைத்து விடுகிறாள்; கஞ்சி ஊட்டுகிறாள்; அவரிடம் அரை மணிநேரம் பேசி சிரிக்கிறாள்;
காட்சி - 2 : விக்னேஷ் அக்கா, என்று கூச்சலுடன் ஹாலுக்குள் நுழைகிறான்; வாடா; இன்று ஸ்கூல் எப்படி போச்சு; ஹார்லிக்ஸ் போடுறேன்; டிரஸ் மாத்திட்டு வா என்கிறாள்; அவன் வந்தவுடன் அவனுக்கு தலை வாரி விடுகிறாள்; 1 மணி நேரம் அவனுக்கு பாடம் நடத்துகிறாள்; அதற்குள் அம்மாவும், அப்பாவும் உள்ளே நுழைகிறார்கள்;
காட்சி-3 : அப்பாவை பார்த்ததும் மது ஓடி வருகிறாள்; அப்பா உட்கார்ந்ததும் கழுத்தை கட்டி கொள்கிறாள்; மனோகர் சந்தோஷமுடன் சொல்லுடா என கொஞ்சுகிறான்; இருவரும் சேர்ந்து அம்மாவை கேலி செய்கிறார்கள்; விக்னேஷ் அம்மாவுடன் சேர்ந்து கொள்கிறான்; அம்மாவுடன் சமையல் அறைக்குள் செல்கிறாள்;
காட்சி - 4 : கேமரா நகர்ந்து வேறு ரூமுக்குள் செல்கிறது; மது யாருடனோ போன் பேசுகிறாள்; சொல்லுடி, ராகவி, இப்போதான் எல்லா வேலையும் முடித்து ஸ்கூல் பேக் யை கையில் எடுக்கிறேன்; என்னது, ராகுல் மிரட்டினது பற்றியா? அவன் நல்ல பையன் தான்; என் பிரண்ட் ஆன உன்னை திட்டும் போது எனக்கு கோபம் வந்தது போல அவன் பிரண்ட் யை திட்டினதுல அவனுக்கும் கோபம் இருக்கும்; விடு சரியாயிடும்; என்னது,?சாரி கேட்கிறதா முதலில் அவங்க மேல தப்பை அவங்க உணரட்டும்; அப்புறம் சாரி கேட்கலாம், ஓகே; நான் ஹோம் ஒர்க் பண்ணனும் ; பேச்சு முடிந்தது;
(திரையில் கருப்பாக ஓடியது ...)

(ராகுல் மனதுக்குள், சாரி மது, ஒரு பெண் என்பவள் வீட்டில் முதியவர்களுக்கு தாதியாய், உடன் பிறப்புகளுக்கு ஆசானாய், தாய்க்கு தோழியாய் , தந்தைக்கு மகளாய் எத்தனை ரூபமாய் ஒளிர்கிறாள்; அவளை வெறும் சதை பிண்டமாய் பார்க்கும் நிலை இந்த உலகின் சாபக்கேடு; அதையே நானும் செய்திட்டேன்; அதற்கு பிராயச்சித்தமாய் இருட்டில் உடை மாற்றும் காட்சியை நீக்கி விட்டேன்; உன்னிடம் மன்னிப்பு கேட்கும் தகுதி கூட எனக்கு இல்லை ; என்னை, நீ மன்னிப்பாயா ? )

கோமதி, இருவரையும் அழைத்துக்கொண்டு ஆஸ்பிடல் சென்றாள்;
-----
மது,” எனக்கு, என்ன ஆச்சு ? திடீர்ன்னு ராகவி வந்து ராகுல் உன்னிடம் சண்டை போட்டான் இல்ல ன்னு ஏதேதோ சொன்னாள்; அதற்குள் எனக்கு மயக்கம் வந்துவிட்டது;”
சுதா," அப்போ நீ மருந்து எதுவும் சாப்பிடலையா ?"
மது," ஏன், ஆண்ட்டி , எனக்கு எங்க வீட்டில் ஒரு குறையும் இல்லை; நான் எதுக்கு மருந்து சாப்பிடணும்? எதுனா பிரச்சனைன்னு வந்த அப்பாகிட்ட சொன்னா போதும் சரி பண்ணிடுவார்;"
(அவளின் அந்த வார்த்தை கேட்டு மனோகர் அவள் கையை பற்றி அழுதான்; தன் குழந்தைக்கு தன் மீதான நம்பிக்கை அவனுக்குள் ஆனந்தம் தந்தது; ஆனந்தியின் கண்களில் நன்றியும், ஆனந்தமும் தெரிந்தன)
சுதா," இந்த ஸ்கூல்ல அப்புறம் ஏண்டி நம்மை கலவரப் படுத்திட்டாங்க; வாங்க, நாம போயி டிரீட்மென்ட் யை மாற்ற சொல்லலாம், எங்க அந்த வாயாடி நர்ஸ் ?";
(அப்போது கோமதி உள்ளே நுழைந்தாள் )
ஆனந்தி, " யார் நீங்க ?";
கோமதி," மது பிரின்ட்டோட அக்கா , வணக்கம்; மது இப்போ எப்படி இருக்கா ?";
ஆனந்தி, " நல்லா இருக்கா; கொஞ்சம் பேசிட்டு இருங்க ; நாங்க டாக்டர் யை பார்த்துட்டு வர்றோம் ";
கோமதி," ஓகே; போயிட்டு வாங்க ";
(எல்லோரின் அழுகையும் கோபமாக மாறின; ஸ்கூல் மிஸ் களையும் டாக்டர்களையும் தேடி ஓடினார்கள்;)
மது," சோர்வுடன் அக்கா, நீங்க யாரு ? ";
கோமதி," நான் ராகுலோட அக்கா; நீ ஏன்மா அவசரப்பட்டுட்ட?, பெண்கள் எப்போதும் துணிவுடன் இருக்கணும்; நம்மள பற்றி அவதூறு சொல்லிட்டு இருந்தவங்க இன்று டெக்னாலஜி டெவெலப்மென்ட் ல தப்பான போட்டோஸ், விடியோஸ் இருக்கு அதை நெட் ல போடுவேன்னு பயமுறுத்தினால் அதுக்காக பெண் இனம் எல்லாம் தன்னை அழிச்சிக்கிறதா

? எத்தனை நாள் இப்படி இருக்க முடியும் ? எதையும் கடந்து போகும் நாம், நம்மீது தவறு இல்லாத போது இதையும் கடந்து போகணும் ";
மது," அக்கா, ராகுல் தான் என்னோட பையில கேமரா வச்சான்னு ராகவி சொன்னாள்; அதைகேட்டதும் வந்த பயத்தில மயக்கம் போட்டுட்டேன்; அவளவுதான்; எல்லோரும் சேர்ந்து பெரிசு பண்ணிட்டாங்க ; எனக்கு தெரியும் ராகுல் நல்லவன் தான்; அவன் கொஞ்சம் கோபக்காரன்; தப்பாக எதையும் செய்ய மாட்டான்; "
கோமதி," நான் கூட நீ தப்பான முடிவு எடுத்துட்டதா பயந்திட்டேன்; ராகுல் உள்ள வா; "
ராகுல்," சாரி மது, இத்தனை குழப்பத்திற்கும் நான் தான் காரணம்; என் தவறை உணர்ந்திட்டேன்; என்னை மன்னித்து விடு; “
(என்னையும் இன்று மிதுன் சேர்ந்து கொண்டான்; இனி நாங்க நல்ல பிரென்ட் உனக்கு; என்றனர்)
கோமதி, " தப்பான எதுவும் பதிவாகலை; பெண்கள் நம் கண்கள் என தலைப்பு போட்டு ஒரு ஷார்ட் பிலிம் போடுற மாதிரி நல்லா இருக்கு; "
(ஆனந்தியும், மனோகர், சுதா என அனைவரும் வந்து சேர்ந்தனர்)
சுதா," அப்போ திட்டின நர்ஸ்கள பாரு, சத்தத்தை காணோம்; டாக்டர் முகத்தில் ஈ- ஆடலை";
எல்லோரின் சிரிப்பு சப்தமும் அந்த இடத்தை நிரப்பின;
(குற்றம் நடந்தது என்ன என்று ஆராயாமல், நடப்பதை தடுக்க முயன்றால் போதும், நாடும் வீடும் சந்தோசமாகும்😉

எழுதியவர் : சம்யுக்தா ( நரேனி தாசன் ) (23-Jul-20, 2:01 pm)
சேர்த்தது : Samyuktha
Tanglish : yaar kutram
பார்வை : 352

மேலே