அவனும் அவளும்
ஏனோ நீ வேண்டாம் வேண்டாம் என்று
இன்று என்னை விட்டு விட்டு விலகி
எங்கோ போக பார்க்கிறாய் ஆனால்
உன் கால்கள் போக மறுக்கின்றன -உந்தன்
விழிகள் உன்னைக் காட்டிக்கொடுக்கின்றனவே
அதில் வழியும் கண்ணீர் கண்ணே என் உள்ளத்தில்
நீயன்றி வேறு யாரும் இல்லை என்னுள்ளத்தில் என்று
உன் உள்ளத்தின் கண்ணாடியாய்த் தெரிகிறதே
ஓ ஓ தெரிந்துகொண்டேன் நான் இப்போது
நம்மைப் பிரிக்க பார்க்கும் ஜாதி என் உயிருக்கு
ஊறு விளைவிக்குமோ என்றுதான் நீ இப்படி போகின்றாய்
அடி என் ஆசைக்கிளியே என் உயிர் உன் உயிர்
வேறில்லையே பின் ஏன் உனக்கு இந்த பயம்
வாழ்ந்தால் ஒன்றாய் வாழ்வோம் வீழ்ந்தாலும்
காலன் நமக்கு துணை நிற்பான் கலங்கிடாதே
என்னைவிட்டு எங்கும் போய்விடாதே இளமானே