மருத்துவ வெண்பா – புடலங்காய் – பாடல் 56
நேரிசை வெண்பா
போகம் விளையும் பொருந்தி வளருமையம்
ஆகமதிற் பித்தம் அணுகுங்காண் – மேகப்
படலங் கவியளகப் பாவாய்கேள் நாளும்
புடலங்காய்க் குள்ள புகழ். 56
- பதார்த்த குண விளக்கம்
குணம்:
புடலங்காய்க்குச் சுக்கிலமும், கபமும், பித்தமும் அதிகரிக்கும்.
உபயோகிக்கும் முறை:
நீளமாயுள்ள புடலங்காயை அரிந்து பொரியலாகவும், கடலைப் பருப்புடன் கூட்டிக் கூட்டமுதமாகவும் அன்னத்துடன் உண்பதுண்டு, இது தேகத்தின் அழலையை ஆற்றும். உள்வறட்சியை நீக்கும். தேகம் தழைக்கச் செய்யும். ஆனால் கப தேகிகளுக்கு ஆகாது.