தமிழே கிரீடம்
தமிழ் எனும் தேனின்
சுவை காண
தவம் காண வேணும்
நாவில்
மொழியெனும் தேன்
ஊற சுவை கூடுமே,
இன்பத்தில் எல்லாம்
பெரும் இன்பம்
தமிழ் தரும் சுவை இன்பமே ,
நாவினிக்க
அதில் தேன் இனிதிலும்
தமிழ் இனிது நாமுணர,
தமிழ் சொல்லால்
இன்தமிழை
அள்ளி அள்ளி நாம் கொடுக்க
நறுமணம் நாற்புறமும்
நலமுடனும், நயத்துடனும்
வாசத்துடன், சுவாசத்துடன்.....
தமிழே கிரீடம்
நம் தலைமுறைக்கும்,
தமிழ் மண்ணுக்கும் .
வாழ்கின்றோம் என்றென்றும்
வாழ்வோம்
தலைக்கனத்துடன் தமிழால்
தமிழ் வாழ்க, வளர்க