இறை அருள் வேண்டும்
இறை அருள் வேண்டும்
அச்சமடைந்த மக்களுக்கு ஆறுதல் அளித்து
ஆபத்தான நிலையிலும் அன்புடன் அரவணைத்து
ஓய்வின்றி உழைத்து உடலும் மனமும் சலித்திட
தங்கள் உயிரையும் தான் பணையம் வைத்து
உயரிய தொண்டினை செய்யும் மருத்துவ மக்கள்
உண்மையில் கடவுளாக நாம் காணும் இந்நிலை
கண்டு மனம் தவிக்கையில் தஞ்சமென அடைய
இறையல்லாமல் யாருளர் என்று அறியேனே