சர்ப்ரைஸ் அந்த அப்சரஸ் நிகர் அழகிகள்
கற்பனைக்கு அப்பாற்பட்ட அற்புத
------அப்சரஸ் நிகர் அழகிகள் ஹெலன் கிளியோபாத்ரா
விற்புருவம் வேறுவிதமாக வளைத்து அவர்கள் பார்த்திட
------போர்க்களம் சிவந்து புதுமையில் புரண்டது வரலாறு !
சர்ப்ரைஸ் அந்த அப்சரஸ் நிகர் அழகிகள் விழியால்
------பூமியில் எழுதிய அழகின் அதிசய சரித்திரப் புத்தகம் !
எதுகை ஓசை கருதி ஆங்கிலச் சொல் சர்ப்ரைஸ் !
ஆச்சரியம் அந்த அப்சரஸ் நிகர் அழகிகள் விழியால்
------பூமியில் எழுதிய அழகின் அதிசய சரித்திரப் புத்தகம் !
----என்றும் படிக்கலாம்
இப்பொழுத்து மோனையின் அழகுடன் இன்னும் சிறப்பாகவே
இருக்கிறது .!