கனவுகளே

கனவுகளே..
***************
காதல் கனவுகளே கடும்மனதையும் கனியாக்கு
கற்காதவையும் கற்று கண்கள் ஒளிபெறட்டும்
காதலில் புனிதம் கண்ணில் இருந்தால்
காலமெல்லாம் கருணையும் கசிந்து வந்துவிடும்
கனவுகளே நெஞ்சில் கனிவொன்றை தந்துவிடு
காலைப் பொழுதில் கலைவண்ணமாய் விடிந்துவரும்
விளைந்த கனவுகளே விடியாத பாரங்களையும்
விரட்டிவிடவே மனதோடு உறவு கொண்டுவிடு
அகிலன் ராஜா கனடா

எழுதியவர் : Akilan rajaratnam (31-Jul-20, 1:05 am)
Tanglish : kanavukale
பார்வை : 167

மேலே