புத்தன் வீட்டுப் பூக்கள் ---தொடர் 42---

புத்தன் வீட்டுப் பூக்கள் - ௪௨

411. நீ, வா, போ என்ற சொற்கள் எல்லாம் யாரையும் இழிவுப் படுத்துவன அல்ல
அவற்றை உச்சரிக்கும் தொனியில் உள்ளது அதன் உண்மை பொருள்.

412. ஒரு இடத்தில் தொடங்கிய வேலையைப் பாதியிலே விட்டுச் செல்லாதே
அந்த இடத்தில் வரும் நபருக்கு அது துன்பத்தை ஏற்படுத்தும்.

413. ஒருமுறை செய்த தவறுக்கு அடுத்தவர் மேல் குறை சொல்லித் தப்பிக்கலாம்
ஒவ்வொரு முறையும் தப்பித்துக் கொண்டே இருக்க முடியாது.

414. உறவுகள் இன்பம் துன்பம் என்ற இரு கண்களைப் பெற்றிருக்கும்
அது ஒரு விழியாலே மற்ற உறவுகளைப் பார்க்கும்.

415. ஒன்றை அழிக்கும் போதெல்லாம்
உனக்குத் தெரியாமல் ஒன்றை இழக்கிறாய்.

416. எப்போதும் கீழே இருப்பவரை இழிவுப் படுத்தாதே
நீ எவ்வளவு உயரத்திற்குச் சென்றாலும்
அப்போதும் உன் நிழல் கீழே தான் விழும்.

417. பணிவை விலக்கும் உயர்வுக்குப் பெருமை கிடைக்காது
உயர்வும் பணிவும் ஒன்றி இருத்தலே பெருமை தரும்.

418. நீ தேடும் போது கிடைக்காத ஒன்று
பின்னாளில் வேறு ஒன்றைத் தேடும் போது கிடைத்துவிடும்.

419. குடும்பங்கள் குழந்தைகளிடம்
ஒன்றைச் சொல்லாமல் தவிர்க்கும்
ஒன்றைச் சொல்லிப் பழக்கும்.

420. உன் நிலை என்னவென்று அறிந்து செயல்படு
அங்கிருந்து தொடங்கும் நீ முன்னேறும் வழி.

...இதயம் விஜய்...
..ஆம்பலாப்பட்டு..

எழுதியவர் : இதயம் விஜய் (4-Aug-20, 9:57 am)
சேர்த்தது : இதயம் விஜய்
பார்வை : 187

மேலே