ஹைக்கூ கவிஞர் இரா இரவி
ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
இனிக்கும் தேன் தடவிய
கொடிய நஞ்சு
புதிய கல்விக் கொள்கை !
மாநில உரிமைகள்
அபகரிப்பு
புதிய கல்விக் கொள்கை!
மிகப்பழைய கள்
புதிய மொந்தையில்
புதிய கல்விக் கொள்கை!
விழி பிதுங்குது
இருமொழிகளுக்கு
எதற்கு மும்மொழி!
ஆள் குறைப்பு
அரங்கேற்றம்
கொரோனாவைச் சொல்லி!
எண்ணிக்கை குறைந்தால்
இனிதாகப் படிப்பார்கள்
பொதுத் தேர்வு !
கூண்டு சிறை
கூடு அறை
வேண்டாம் கூண்டு !
அவசியத்திற்கே அல்லல்படுகிறோம்
அனாவசியத்திற்கு விளம்பரம்
வந்தது சினம்!
விரும்பாமலே
உதிர்க்கின்றன இலைகளை
ஆடிக்காற்று!
வாங்குவதால் தான் கூடுகிறது
வாங்காவிட்டால் குறையும்
தங்கம்!
வரவேண்டும் மறுமலர்ச்சி
சுடுகாட்டில் அனுமதி
பெண்கள்!
பணக்காரர்கள் உதவவில்லை
பிச்சைக்காரர்கள் உதவுகின்றனர்
கொரோனா நிவாரணம்!
முகக்கவசம் கைசுத்தம்
கைவிடுகின்றன சிலரை
கொரோனா!
இருவரின்
உயிர் குடித்தது
இணைய வகுப்பு!
வருது வருது என்கின்றனர்
வந்தபாடில்லை
கொரோனா தடுப்பூசி!