வான் மழை‌‌

வானில் இருந்து விழுந்த
மழை‌த்துளி எல்லாம்..!
மண்ணிற்கு வர காரணம்
என்ன..?

வானம் கொண்டாடுகிறாதா..?
மேகம் அழுகிறாதா..?
மண்ணிற்கு கொண்டாட்டமா?
பூமிக்கு பரமா?

வானுக்கு மழை
வரமா..? சாபமா..?
பூமிக்கு மழை
வரமா..? சாபமா..?

எதற்கு இந்த
வான் மழை‌‌..?
எதற்கு இந்த
சாரல் மழை..?

இறைவன் படைப்பில்
மழை காதல்..!
நனைந்தவன் படைப்பில்
மழை கவிதை..!
♥️💛🧡💚💙💜✨💜💙💚🧡💛♥️

✍️பாரதி

எழுதியவர் : பாரதி (4-Aug-20, 9:33 pm)
சேர்த்தது : பாரதி பிரபா
பார்வை : 4572

மேலே