கவிஞன் ரசிகை

பொய்யில் ஒரு புதுமை செய்ய முயன்றேன்
அது கவிதை என்று பெயர் கொண்டது
அந்தக் கவிதை எல்லாம்
உன் விழியோரத்தில் பிறந்து வந்து
உன் புன்னகை இதழ் வழி நடந்து
மாலையின் அழகில் விரியும் !

கவிதையின் தலைவி நீ
கவிஞன் நான் ரசிகன் நான்
நீயும் ரசிகை தானே
காண்ணாடிக்கப்பால்
உன்னை நீயே ரசித்துக் கொள்வது
என் கவிதையில் தானே jQuery17107259585748990729_1596561442121?

எழுதியவர் : கவின் சாரலன் (4-Aug-20, 10:50 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
Tanglish : kavingan rsigai
பார்வை : 166

மேலே