வாசமுள்ள பூந்தோட்டம்

வாசமுள்ள மலர்த்தோட்டம்
வண்ணத்துப்பூச்சிகளின்
ஒய்யாரம்
வண்டுகளின் இரைச்சல்
சிட்டுக்குருவிகளின் குரலோசை
இத்தனைக்கும் மத்தியில்
அழகிய காதல் ஜோடிகள்
பளிச் பளிச்சென மின்னும்
படம் பிடிக்கும் கருவிகளின் அட்டகாசம்
எதுவும், எவருக்கும், எதற்கும்
இடைஞ்சல் இல்லை.
அவரவர் தன்தன் வேலையில்
மும்முரமாக ,
ஆனாலும் வண்டுகள் மலர்களிடம்
எனக்காகவே நீ எனக்காகவே
என்று மனசெல்லாம்
மலர்களிடம் பறிகொடுத்து
வாஞ்சையுடன் தேனையுண்டது,
மலர்களோ வண்ணத்துப் பூச்சியின்
அழகிலே மயங்கித்தான் கிடந்தன ,
குருவிகளின் மெல்லிசை
அழகிய மலர்களின் காதில்
தேனூற வைத்தது,
காதலின் கயவர்களோ இந்த
பூந்தோட்டமே நம் அழியாக் காதலின்
சின்னமாய் சிகரமாய் கொண்டனர்.
எங்கும் கிடைக்காத மகிழ்ச்சி
இப்பூந்தோட்டத்தில் ......
எவ்வெவர்க்கும் ஏற்றாற்போல்
என்றும் குதூகலத்துடன்
வாசமுள்ள பூந்தோட்டம் .

எழுதியவர் : பாத்திமாமலர் (5-Aug-20, 11:31 am)
சேர்த்தது : பாத்திமா மலர்
பார்வை : 286

மேலே