அச்சம் தவிர்
தாயின் கருவில் உதித்த நிலவொவியமே! அச்சம் தவிர் ஆனந்தம் கொள்... கவலை உன்னைத்தொடும் போது காற்று நிரம்பிய பலூனாய் மாறாதே.., மாறாக வானை பிளந்து செல்லும் ஏவுகணைகளாக மாறு.. அனைத்தும் புகையாகி போகட்டும். வெற்றி நோக்கி ஓடும் விந்தையே.. வெற்றிடமாய் மாறி போகதே! உன்னுள் உலகைத்தேடு! பலர் விரும்பும் பூந்தோட்டமாகும் வரை. உன்னை சுற்றி நடக்கும் அநீதியை சற்றே பார்வையிடு சகலமும் சாத்தியமாகி போகட்டும்.... சறுகல் நிறைந்த வாழ்க்கையில் இவ்வுலகைக் கண்டுத்துளியும் அச்சம் கொள்ளாதே! இவர்கள் இழந்ததை நினைத்துக்கொண்டு இறந்தக்காலத்தைக் கடக்கமாட்டார்கள். எதிர்பார்ப்புகள் வைத்துக்கொண்டு எதிர்காலத்திலும் வாழமாட்டார்கள்.... சற்றும் நிதானமில்லாததால் நிகழ்காலத்தில் வாழமுடியாதவர்கள். ஆதலால் நீ உயர்ந்து நில்.. துணிந்து நில். என்றாலும் உன் மனக்குமுறலை உணரமுடியும் என்னால்... தவறுச் செய்தால் கடவுள் தண்டிப்பார்! என்றால் என் அன்னை அன்று.... தவறுகளை வேடிக்கைப் பார்க்கும் கடவுள் எப்படி தண்டிப்பார்? குழந்தைகள் கொல்லப்படும்பொழுது என் சந்தேகங்கள் அதிகமாகிறது... ஒருவேளை இறைவனையும் இவர்கள்கொன்றிருப்பார்களோ என்று? நீங்கள் நரக வாழ்வை அனுபவிக்கக் காரணமானத் துரோகிகள் நீங்கள் போயிருக்கும் சொர்க்கத்திற்கு வரப்போவதில்லை. நீ ஒருநாளும் அச்சம் கொள்ளாதே! உன் ஒவ்வொரு நாளும் உன் வெற்றிக்குரிய நாளே அச்சம் தவிர்
ஆளப்பிறந்தவள் நீ!
குயில்களே உங்கள் தலைமறைவிற்கு வேடன் காரணமென்றால் அவனை அம்புப்படுக்கையில் கிடத்துங்கள்..
✍🏻 பாக்யா மணிவண்ணன்.