தேநீர் நேரம் 2
கவிதைமணி தந்த தலைப்பு
" தேநீர் நேரம் " 2
கவிதைமணி நன்றி
○○○
வேலை தளத்திலே வேலை
செய்து களைத்துப் போகும்
நாடி நரம்புகள் தளர்ந்துவிடும்
வேளையில் முறுக்கு ஏத்தும்
சுறுசுறுப்பாக்கும் மீண்டும்
வேலைக்கு ஆயத்தமாக்கும்
நேரம்தான் தேநீர் நேரமாக
ஒதுக்கம் வேலைத் தளத்தில்
பழக்க தோஷம் தேநீர் நேரத்தில்
அருந்தாவிடில் எதையோ இழந்த
உணர்வுகள் எழுந்து உணர்த்தும்
அது இன்னதென்று தோன்றாது
பதநீர் நேரம் பழச்சாறு நேரம்
சிலருக்கு நீராகார நேரம் என்று
உண்டு அவரவர் வசதிக்கேற்ப
அங்கனமே இத்தேநீர் நேரமும்
.......
சகாய மேரி வேளாங்கண்ணி
அரியலூர் திருக்கை