பார்வையின் வினோத பரிவர்த்தனைகள்

அடியே என் காதலியே நீயறியாயோ
உந்தன் கண்கள் புரியும் ஜகத்ஜாலத்தை
உன் விழிகளின் பார்வையைவிட்டு பிரிய
மனமிலா என் விழிகள் இதை எனக்கு சொல்லுதடி
'விழியியல்; என்றே ஒரு வார்த்தையில் அடங்கும்
உந்தன் அற்புதப் பார்வை.....
நீயோ ஒன்றும் அறியாதவள்போல் என்னையே
மௌனமாய்ப் பார்த்துக்கொண்டிருக்க.................
அதற்கவள் சொன்னாள், ;' அன்பே நீ
அறியாயோ உந்தன் புன்னகைத்தான் என்
மனத்தைக் கட்டிபோட்டுவிட செயலிழந்து
மௌனமாய் உன்னையே நான் பார்த்துக்கொண்டிருந்தேன்....

நீ சொல்கிறாய் நீ என்னையே என் விழிகளையே
பார்த்துக்கொண்டிருப்பதாய்...

பார்வையில் , காதலர் பார்வையில் இப்படியும்
சில வினோத பரிவர்த்தனைகள்..................

எழுதியவர் : வாசவன்=தமிழ்பித்தன்-வாசு (6-Aug-20, 1:49 pm)
பார்வை : 86

மேலே