ஒரு பத்து நாள் கழிச்சி

ஜென்னி படுசுட்டி. தன்னுடன் வேலை பார்த்து வந்த நிதினை ஒருதலையாக விரும்பி வந்தாள். இவள் காதல் வலை வீசுவதை தெரிந்தும் தெரியாதது போல் காட்டிக்கொண்டான், நிதின். ஜென்னி மீது காதல் வராவிட்டாலும் ஆவலுடன் பழகுவதை அவன் நிறுத்தவில்லை. காரணம், இவனது முன்னாள் காதலி ஸ்வேதா'வின்குணங்களை ஜென்னி வைத்திருப்பதே.

நிதினிடம் எப்படி காதலை சொல்வது என்று தெரியாமல் குழம்பி இருந்தாள் ஜென்னி. தன்னுடன் வேலை செய்யும் ரம்யா'விடம் கருத்து கேட்டாள். அவளோ ஜென்னியிடம், "நாளைக்கு உன் பிறந்த நாள்தானே? அவன் உனக்கு விஷ் பண்றப்போ ஐ லவ் யு'னு சொல்லிடு" என்றாள். ரம்யாவும் நிதின்நும் பல நாட்களாக இந்த கம்பெனி'யில் வேலை பார்க்கிறார்கள். நிதின்-ஸ்வேதா காதல் முறிவுக்கு பிறகு, நிதினுக்கு அலுவலத்தில் ஆதரவாக இருந்ததே, ரம்யா தான். மேலும் ரம்யாவும் ஜென்னியும் சிறந்த நண்பர்கள்.

மறுநாள்: ரம்யாவின் ஆலோசனை படி, ஆயத்தமானாள், ஜென்னி . அடிக்கடி, பாத்ரூம் சென்று, "ஐ லவ் யு" என்று சொல்லி சொல்லி, பழக்கிக்கொண்டாள். நிதின், அலுவலகம் வந்ததை கவனித்தாள். ஈமெயில் பார்த்து, இன்று ஜென்னி பிறந்த நாள் என்பதை அறிந்தான் நிதின். அவன் இருக்கையை விட்டு எழுந்ததுமே, ஜென்னிக்கு நடுக்கம் வந்து விட்டது. ரம்யா கட்டை விரலை உயர்த்தி காட்டி, காதல் வாழ்த்து சொன்னாள்.

நிதின், "ஹாய், ஜென்னி, ஹாப்பி பர்த்டே" என்று சொல்லி முடிப்பதற்குல் ஜென்னி, "ஐ லவ் யு" என்று சொல்லி முடித்திருந்தாள். நிதினுக்கு இது பெரிய ஆச்சர்யம் இல்லை. எதிர்பார்த்ததே. ஆனால், இவ்வளவு சீக்கிரம் வரும் என்பதை எதிர்பார்த்திருக்கவில்லை. "உனக்கும் என்னை பிடிக்கும் என்றால், ரெண்டு சாக்லேட் எடுத்துக்கோ, இல்லை என்றாள், ஒன்று எடுத்துக்கோ என்றாள்" பரபரப்புடன்.

என்ன செய்வதென்று தெரியாத, நிதின், "ஒரு பத்து நாள் கழிச்சி பதில் சொல்றேன்" என்று சொல்லி, மீண்டும் பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்லி, சாக்லேட் ஏதும் எடுக்காமல் இடத்தை காலி செய்தான். ஜென்னி சற்று ஏமாற்றம் கலந்த எதிர்பார்ப்புடன் காணப்பட்டாள். இதை அனைத்தையும் கவனித்த ரம்யா, ஜென்னிக்கு ஆறுதலும் நம்பிக்கையும் ஊட்டினாள். "நிதின், உனக்கு ஓகே சொல்வான் பார்" என்று சிரித்துக்கொண்டே சொன்னாள், ரம்யா. ஜென்னி ஆறுதல் அடைந்தாள். ஆனால் எதிர்பார்ப்பு கூடியது.

வேலை முடிந்து ரூம்' சென்றதும் நிதின், நடந்த அனைத்தையும், தன்னுடன் வசிக்கும் எழில், பாலா மற்றும் லிங்கம் ஆகியோருக்கு சொன்னான். அவர்கள் அனைவரும், "ஏன் டா, உடனே ஓகே சொல்லல? உடனே, ஜென்னிக்கு போன் போட்டு ஓகே சொல்லு டா" என்று சொன்னார்கள்.

நிதினை காதலிப்பதாக முதலில் சொன்னது ஸ்வேதாதான்,
அவர்களின், மூன்று வருட காதலுக்கு பிறகு, ஒரு சண்டையில், "நீ வேண்டாம் போடா" என்று உதறி விட்டு காதலை முறித்துக்கொண்டது ஸ்வேதா தான். நிதின் எவ்வளவோ முயற்சித்தும் அவளை சமாதானப்படுத்த முடியவில்லை. ஒரு கட்டத்தில், "இனி நீ, என்னை தொந்தரவு செஞ்சேனா, போலீஸ் ல கம்பளைண்ட் பண்ணிடுவேன்" என ஸ்வேதா சொல்லவும் நிதினும் விலக ஆரம்பிச்சான். ஸ்வேதாவும் போன் நம்பர் மாற்றி விட்டாள்.


நிதின் விலகினாலும் அவளை பற்றிய சிந்தனையை அவனால் மறக்க முடியவில்லை. அவர்கள் பிரிந்து ஒரு வருடம் ஆகிறது. இன்றளவும், எழில், பாலா, லிங்கத்தோடு, மது அருந்தும் போது, ஸ்வேதாவை பற்றிய புராணத்தை மட்டுமே பாடுவான். நிதின் ஸ்வேதா ஒன்றாக இருந்ததை, இம்மூவரும் பார்த்து இருந்ததால், நிதின்'ஐ அவர்களால் புரிந்து கொள்ள முடிந்தது.

இன்று ஞாயிற்று கிழமை. ஒன்பதாவது நாள். நாளை தான் ஜென்னியிடம் பதில் சொல்வதற்கான கடைசி நாள். வெள்ளி கிழமை இரவே, தனது அம்மா அப்பா வை பார்க்க, 100km தொலைவில் இருக்கும் தனது சொந்த ஊருக்கு சென்று இருந்தான் நிதின் . வெள்ளி கிழமை இரவு வீட்டுக்கு சென்று ஞாயிறு இரவு ரூம்க்கு திரும்புவது அவனது வழக்கம்.

எழில், பாலா மற்றும் லிங்கம் ஆகிய மூவர் மட்டும் ரூமில் டிவி பார்த்து கொண்டிருந்தனர். "டிங் டாங்" - காலிங் பெல் ஒளி. கதவை திறக்க சென்றான், பாலா. பார்த்தால், ஸ்வேதா!!!!

"ஹாய் ஸ்வேதா, எப்படி இருக்க?" என்றான் பாலா.
"நல்ல இருக்கேன், நீங்க எல்லாம்?" என்றாள் ஸ்வேதா
பாலா: 'ஹ்ம்ம் சூப்பரா இருக்கோம்"
ஸ்வேதா: நிதின் இருக்கானா?
பாலா: அவன் இல்லை, ஊருக்கு போயிருக்கான், நைட் வந்துருவான்", உள்ள வா, முதல்'ல
ஸ்வேதா: இல்ல பரவால்ல' (முகம் வாடிவிட்டது).
எழில், லிங்கம் (வாசல் வந்து): ஹாய், ஸ்வேதா?
ஸ்வேதா (அழுத்த குரலில்): எனக்கு ஒரு பேப்பர், பேணா தரீங்களா?

உடனே உள்ளே சென்ற லிங்கம், பேப்பர், பேணா எடுத்து வந்து ஸ்வேதாவிடம் கொடுத்தான். வெளியில் இருந்தபடியே, எதையோ, அந்த பேப்பரில் எழுதினாள் ஸ்வேதா. பின்பு அதை, எழிலிடம் கொடுத்து, "எழில், இதை, மறக்காம, நிதினிடம் கொடுக்கிறியா ப்ளீஸ்?" என்றாள். அவனும் சரி என்று சொல்லி, "நிதினுக்கு கால் பண்ணி தரட்டுமா?" என்று கேட்டான். அதற்கு, அவள், "நான், அவன்கிட்ட, first பேசுறது நேர்'ல தான் இருக்கணும், இந்த லெட்டரை மட்டும் அவன்கிட்ட கொடுத்திட்டு" என்றாள். அவன் சரி என்று சொன்னதும், "bye " என்று அனைவருக்குக்கும் சொல்லி கிளம்பினாள் ஸ்வேதா.

பிரிந்து போன நண்பனின் காதல், சேர போக இருக்கும் தருவாயில் இருப்பதால் நண்பர்கள் மூவருக்கும் ஒரே குஷி. அதே நேரத்தில், ஜென்னியின் நிலையை கண்டு சற்று வருத்தமும் இருந்தது. உடனே நிதினுக்கு போன் செய்த அவர்கள், ரெண்டு மணி நேரத்துக்குள் உடனே ரூம்க்கு வருமாறு கேட்டுக்கொண்டனர், "மிகவும் அவசரம், வேறு எதுவும் சொல்ல முடியாது" எனவும் சொன்னார்கள்.

அவசர அவசரமாக ரூம் வந்து சேர்ந்தான், நிதின்.

எழில்: "மச்சி, நீ கொடுத்துவச்சவன் டா,
நிதின்: முதல்'ல மேட்டர் 'ர சொல்லுங்கடா, எதுக்கு டா அவசர அவசரமா என்ன வர சொன்னீங்க?
பாலா: கூல் buddy !!! (பொறுமையாக)
லிங்கம்: (உரத்த குரலில்) மச்சான், உன் ஆளு, ஸ்வேதா வந்ததாடா உன்ன தேடி!!!
(மூவரும், நிதினை கட்டி அணைத்தனர்)

சில நொடிகளுக்கு பிறகு:

எழில்: நிதின், உனக்குலாம் வாழ்க்கை டா (சற்றே நக்கலுடன்)

பாலா: அப்புறம் மச்சி, "ஸ்வேதா, ஸ்வேதா"னு பினாத்திக்கிட்டே இருந்த. ஆளு வந்துட்டா, இதுல, ஜென்னி வேற, கலக்குற போ (சிரிப்புடன்)

நிதின் (மகிழ்ச்சியுடன்) : ஏதாச்சும் சொன்னாளா?

லிங்கம் (பெண் குரலில், கலாய்த்தவாறு): நிதின்கிட்ட, நான் first பேசுறது நேர்'ல தான் இருக்கணும்

பாலா: இப்படி தான், உன் ஆளு சொன்னா பா

எழில்: உனக்கு ஒரு லெட்டர்' கொடுத்துருக்கா , (நீட்டி அதை படிக்க சொன்னான்)

இவ்வளவு நேரம் உற்சாகத்தில் இருந்த நிதின்'னிடம் ஒரு அமைதி மற்றும் ஆர்வமின்மை தெரிந்தது.

"என்ன டா எந்த ஒரு interest இல்லாத மாதிரி சீன் போடற" என பாலா சொன்னான்.

"அந்த லெட்டரை கிழிச்சிடு, எழில்" என்றான் நிதின்

பதறிய அவர்கள், "ஏன் டா, உனக்கு கிறுக்கா புடிச்சிருக்கு. இத்தனை நாள், 'அவ போய்ட்டா, போட்டா' னு ஒப்பாரி வச்சிட்டு, இப்ப, லூசு மாதிரி பேசுற" என்றனர்.

"நீங்க சொல்றது ரைட் தான், நானும் அப்டி தான் பீல் பண்ணிட்டு இருந்தேன். ஆனா, இப்போ அப்டி பீல் பண்ணல. அன்னிக்கு, நான் தான் அவள் கிட்ட harsh ஆ பேசுனேன். ஆனால், அவகிட்ட பலவாட்டி 'சாரி' சொன்னேன். அனா அவ கேட்கல. என்ன பொறுத்தவரைக்கும் ஒரு relationship ல ரொம்ப முக்கியம், நம்பிக்கை மட்டும் இல்ல, சகிப்பு தன்மையும் தான். அவங்க எப்படி இருக்காங்களோ, அப்டியே ஏத்துக்கணும். அவ ஏத்துக்கல, அவ்ளோ சாரி சொல்லியும்.. இப்ப அவள் ஏன் வந்து இருக்கா'நா, அவள் வேற ஏதோ ஒரு விஷயத்துல, down ஆ பீல் பண்ணி இருப்பா. அவ்ளோ தான். இப்போ தான், நானும் realize பண்றன். இத்தனை நாளா, நான் இப்டி சுத்துனதுக்கு காரணம், அவள் என்ன விட்டு போய்ட்டானு இல்ல. இவ்ளோ அன்பு காமிச்சும், ஒரு சின்ன விஷயத்துக்கு, கோவப்பட்டு , சாரி கேட்டும், கொஞ்சம் கூட சகிப்பு தன்மை இல்லாம, போய்ட்டாளே..., நான் அவகிட்ட உண்மையான லவ் ஆ கொடுக்களையோ? அப்படிங்கிற விரக்தி தான் காரணம், இன்னிக்கு, இன்னிக்கு அவ வந்ததும், என்னோட காதல் தான் பெஸ்ட், அப்டினு பீல் பண்றேன், சோ, இனி, நான் அவளோட சேர போறது இல்ல, நான் ஒன்னும் ஈகோ பாக்கல, சின்ன சின்ன விஷயத்துக்கும் பெரிய பிரிவு எனக்கு பிடிக்கல " என சொல்லி முடித்தான்.

(எழில், பாலா & லிங்கம்: சில நொடிகள், என்ன சொல்வது என்றே தெரியாமல், அமைதி காத்தனர்)

பாலா (ஆரம்பித்தான்): சரி டா, அவ லெட்டர் ல என்ன எழுதி இருக்கானு பாரு டா

நிதின்: இல்ல மச்சி, அத படிச்சா, அவளை நோக்கி திருப்பி நான் போனாலும் போய்டுவேன். ப்ளீஸ், அந்த லெட்டர் ஆஹ் கிழிச்சிடு

எழில்: சரி மச்சி, ரொம்ப எமோஷன் ஆகாத. சரக்கடிக்கலாமா?

நிதின்: இல்ல டா, எனக்கு மூட் இல்ல, நீங்க வேணாம் அடிங்க.

எழில்: நாங்க அடிக்கலாமா?

நிதின்: sure . நீங்க ஸ்டார்ட் பண்ணுங்க, நான் போயி எல்லாருக்கும் சாப்பாடு வாங்கிட்டு வரேன்.

(நிதின் சென்ற பிறகு)

லெட்டரை கிழிக்க மனமில்லாமல் தலையை பியித்துக்கொண்டனர். மது அருந்த ஆரம்பித்தனர். போதையில், பாலாவின் அறிவுரையின் பேரில் லெட்டரை படிக்க முடிவு செய்தனர். அந்த லெட்டரில் அப்படி என்ன தான் ஸ்வேதா எழுதி இருக்கிறாள் என்ற ஆர்வம், போதை வேறு.

லெட்டரை படித்ததும் அனைவரும் ஆடிப்போயினர். இவங்க ரெண்டு பேருக்கும் (நிதின், ஸ்வேதா) இவ்வளவு, சிந்தனை ஒற்றுமையா என்று?

இதை கண்டிப்பாக நிதினிடம் சொல்லியே ஆக வேண்டும், இவர்களை சேர்த்தே ஆக வேண்டும் என்று முடிவு செய்தனர். நிதின், லெட்டரை படித்ததற்காக, தப்பா நினைத்தாலும் பரவா இல்லை என்று முடிவு செய்தனர்.

(நிதின், சாப்பாடு வாங்கி வந்ததும்)

பாலா: ஹே, நிதின், ஸ்வேதா, லெட்டர்'ல என்ன எழுதி இருக்க தெரியுமா?
நிதின்: நீ படிச்சியா?
பாலா: முதல்'ல அவ என்ன எழுதி இருக்கானு பாரு, அப்புறம், நீ இப்டி பீல் பண்ண மாட்ட
நிதின்: லெட்டரை படிச்சியா இல்லையா?
எழில்(கோபத்துடன்) : அமாம், நாங்க மூணு பெரும் தான் படிச்சோம், அவ, என்ன எழுதி இருக்கானு கேளு.
நிதின்(எழிலின், சட்டையை பிடித்து): யார்ட்ட கேட்டு டா படிசீங்க டா, நாய்ங்களா?
(என்று கேட்டு, மொட்டை மாடிக்கு, படுக்கையோடு சென்று விட்டான், நிதின்.)

திங்கள் காலை: எழில், பாலா & லிங்கம் மூன்று பேரும் ஒன்று சேர்ந்து, நிதினிடம், சாரி கேட்டனர்.

"இல்லடா, நான்தான், சாரி கேக்கணும், எதோ போதை ல , லெட்டர் படிச்சு இருப்பீங்க, அதுக்காக, நான், சட்டையை பிடிச்சு, நாய்'னு சொன்னது, தான் பெரிய தப்பு, சோ சாரி என்றான்" நிதின்.

"இதெல்லாம் ஒரு மேட்டர் இல்ல டா, நாங்க பண்ணது தான் தப்பு , ஆனா நீ அந்த லெட்டரை படிக்கணும் ப்ளீஸ்" என்றான் எழில்.

"இல்ல மச்சி, swetha is my ex. thats all. இனிமேல், அவ என் லைப் ல இல்ல" என ஆணித்தரமாக சொல்லிவிட்டான்.

பாலா: சரி மச்சி, அந்த லெட்டரை நாங்க படிச்சி இருக்க கூடாது. ஆனா படிச்சிட்டோம். இப்போ அதுல என்ன எழுதி இருந்ததுன்னு சொல்ல ல னா எங்க தலையே வெடிச்சிடும். அத மட்டும் கேளு.

நிதின்: இல்ல மச்சி, அது தெரிஞ்சா, அவளை நோக்கி திருப்பி நான் போனாலும் போய்டுவேன், அது சரி இல்ல, சாரி

லிங்கம்(வற்புறுத்தி) : சரி நிதின், நாங்க ஒன்னு பண்றோம், நாங்க மூணு பெரும், ஆளுக்கு ஒவ்வொரு விஷயத்தை சொல்வோம், அதுல ஒன்னு தான், உனக்கு உன் ஆள் உண்மையா எழுதுனது. ப்ளீஸ்

நிதின்: சரி

(எழில், பாலா & லிங்கம் - ஒன்று கூடி, விவாதித்து, நிதினிடம் வந்தனர்)
முதல் விஷயத்தை எழில் சொல்ல ஆரம்பித்தான்

எழில்: Do you still love me?
பாலா: I am extremely sorry, I miss you, and I still love you
(லிங்கம் எப்பவும் சீரியஸ்'ஆன ஆளு கிடையாது, அனாலும் கொஞ்சம் எமோஷனோடு )
லிங்கம்: ஒரு உண்மையான காதல்னா, ஒருத்தர் தெரியாம தப்பு பண்ணிட்டு சாரி சொன்னா, அத உடனே ஏத்துக்கணும் , நான் அத பண்ணல, அனால், இனிமேல், அப்டி பண்ணுவேன், I love you நிதின்

நிதின் (அழாவிட்டாலும், சற்று கலங்கிய கண்ணோடு) : ஹ்ம்ம் சரி, நான் ஆபீஸ் கிளம்பட்டுமா?

எழில்: இப்ப கூட, அவ என்ன எழுதி இருக்கானு தெரிஞ்சிக்க ஆசை இல்லையா டா உனக்கு?

நிதின்: நீங்க சொன்ன, அந்த மூணு விஷயத்தையும் ஸ்வேதா சொல்லி இருக்கணும்னு ஆசை படுறேன் . ஆனா, இனி நாங்க சேர முடியாது.

எழில்: சரி டா, உன் இஷ்டம், அப்போ, ஜென்னிக்கு ஓகே சொல்ல போறியா?

நிதின்:இல்ல டா, ஸ்வேதா மாதிரியே எல்லா "mannerism" மும் ஜென்னிகிட்ட இருந்துச்சு, அதனால தான், எனக்கு ஜென்னி மேல ஒரு ஈர்ப்பு இருந்துச்சு. இப்போ ஸ்வேதா'வயே, வேணாம்னு சொல்லிட்டேன். அப்புறம் எப்படி, ஜென்னிக்கு ஓகே சொல்ல முடியும்? எனக்கா ஒரு பொண்ண புடிச்சு, அவளை நான் தேடி, கண்டுபிடிச்சி, உருகி உருகி லவ் பண்ணனும்.

எழில்: ஹ்ம்ம், அப்போ இனிமேல் ஒரு பொண்ண கண்டு பிடிச்சு, லவ் பண்ணி?


நிதின் (சிரிப்புடன்): கண்டு பிடிச்சாச்சு

எழில், பாலா & லிங்கம் (ஆவலுடன்): யார் டா?

நிதின்: எனக்கு, என்னோட collegue ரம்யா வ பிடிச்சுருக்கு, அவகிட்ட propose பண்ண போறேன்

எழில், பாலா & லிங்கம்: அட பாவி,,,,,

(ஆபீஸ் சென்ற நிதின், ரம்யாவிடம்)

நிதின்: I love you, will you marry me?

ரம்யா (ரொம்ப சாதாரணமா ): ஒ, இப்படி தான், ஜென்னிகிட்டே சொல்ல பொறியாடா, கலக்கு, கலக்கு

நிதின்: இல்ல, நான் ஜென்னியை லவ் பண்ணல, உன்ன தான் லவ் பண்றேன், உனக்கு என்ன பிடிக்குமா?

ரம்யா: டேய், ஜென்னி, ரொம்ப ஆசையா வெயிட் பண்ணிட்டு இருக்கா டா உனக்காக, நீ என்ன டா னா இப்டி சொல்ற.

நிதின்: ஜென்னி என்ன லவ் பண்ணலாம், ஆனா, நானும் பதிலுக்கு பண்ணனும் ல? நான்தான் லவ் பண்ணலயே ? உன் முடிவு என்ன?

இருவரும் சேர்ந்து லவ் செய்தால் தான், வேறு ஒருவர் நுழைய கூடாது. ஒருவருக்கு பிடிக்காவிட்டாலும், வேறு ஒருவர் முயற்சி
செய்வதில், தவறில்லை என்பதை உணர்ந்தாள், ரம்யா. ஆனாலும், நிதினை பிடிக்கும், அதற்காக லவ் செய்யலாமா? என்ற குழப்பம் ஒருபுறம் இருந்தது. மறுபுறம் ஜென்னி.

"ஒரு பத்து நாள் கழிச்சி பதில் சொல்றேன்" என நிதினிடம் சொல்லிவிட்டு நகர்ந்தாள், ரம்யா

எழுதியவர் : தமிழ்ச் செல்வன் (6-Aug-20, 10:47 pm)
சேர்த்தது : தமிழ்ச் செல்வன்
பார்வை : 363

மேலே