வாழும் வழி

நகைகள் பற்பல வீட்டி லிருந்தும்
நல்ல நாளிலும் போட்டுச் செல்ல
வகையே யில்லை வெளியே போக
வந்திட விருந்தை யழைக்க வழியிலை,
பகையாய் வந்த நுண்ணிய கிருமி
பறித்துச் சென்றதே சுதந்திர மெல்லாம்,
அகத்தில் ஆசையைப் பூட்டி வைத்தே
அடங்கி வாழக் கற்றுய் வோமே...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (7-Aug-20, 6:34 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : vaazhum vazhi
பார்வை : 83

மேலே