சுகத்துக்கு ஐந்தே ரூபாய்

சுகத்துக்கு ஐந்தே ரூபாய்

மாத வாடகை அறையில் தங்கல்
மதியச் சாப்பாடு அறையிலே முடித்தேன்
வெள்ளை சொள்ளையாய் கிராமத் தலைவர்
பிள்ளைக் கைக்காரி பின்னே வந்தாள்
மானேஜர் அறையைக் காட்டினார் திறந்து
வந்தக் கைப்பிள்ளைக் காரி குழந்தையை
அந்தவாசல் வெளியில் போட்டு விட்டு
அறைக்கதவு சாத்தித் தலைவருடன் இருந்தாள்
குறுநடைக் குழந்தையங் கிங்கோட
அரைமணியில் வெளியே வந்தனர் இருவருமே

குழந்தை யைத்தூக்கி கொடுத்தாள் தன்பாலை
கிழவன் தலைவன் பத்துரூபாய் தனியாக
நரைமுடி மானேஜ ருக்குத் தந்தவன்
அறையில் சரசம் தந்தவளுக் கொரேஐந்து
அரற்றினாள் தலைவரே குழந்தைப்பா லுக்காச்சும்
தரவே மன்றாடினாள் தரவில்லைக் கொடியன்
சும்மா நின்ற நரைக்குப் பத்துரூபாய்
சுகம்தந்த வளுக்கவன் கொடுத்தது வெறுமைந்து
இறங்கவில்லை குழந்தை முகத்தைப் பார்த்தும்
ஈயா ஈனனையேன் படைத்தானோ
இருக்கவிடா துரத்திய நரையை என்சொல்வதோ

எழுதியவர் : பழனிராஜன் (9-Aug-20, 8:39 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 201

மேலே