கண்ணதாசன் தொட்டால்

கண்ணதாசன் கண்ணைத் தொட்டால்
கவிதை காதல் நதியாய் பெருகி ஓடும் !

கண்ணதாசன் கன்னத்தைத் தொட்டால்
கவிதை மாம்பழத் தோட்டமாகும் !

கண்ணதாசன் புன்னகையைத் தொட்டால்
கவிதை பூக்களின் பிருந்தாவனமாகும் !

கண்ணதாசன் விண்ணைத் தொட்டால்
கவிதைக்காக நிலவு தேயாமலே நடக்கும் !

கண்ணதாசன் கிண்ணத்தைத் தொட்டால்
கவிதைக்கும் போதை வரும் !

எழுதியவர் : கவின் சாரலன் (10-Aug-20, 4:06 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 67

மேலே