இரங்கல்

அப்பா தூங்குகிறார் என்கிறாள்
மழலை மாறாத மகள்
அப்பாவியாய்.
அட- பாவி !
நீயே தேடிக் கொண்ட
நிரந்தரத் தூக்கத்தின்
துக்கத்தை
அவள் அறிவாளோ?
- தீ..கோ.நாராயணசாமி.

எழுதியவர் : தீ.கோ.நாராயணசாமி (10-Aug-20, 12:54 am)
சேர்த்தது : தீ கோ நாராயணசாமி
Tanglish : irangal
பார்வை : 614

மேலே