எல்ஜராது - நாவல் A Scientific Thriller


































எனது முதல் நாவல் இப்பொழுது amazon kindle லில் வெளிவந்து இருக்கிறது .

ஜனவரி 2020 - கொரோனா சீனா தாண்டி பரவ ஆரம்பித்திருந்த நேரம் . என்னென்ன மாதிரியான கொள்ளை நோய்கள் உலகில் வந்திருக்கின்றன என தேடிப் பார்க்கும் போது கண்ணில் பட்டது படை வெட்டுக்கிளிகள் . எகிப்தை தாக்கிய 10 பெரும் கொள்ளை நோய்களுள் ஒன்றாக “Book of Exodus” இல் சொல்லப்பட்டிருக்கும் இவை , பைபிளிலும் , குரானிலும் குறிப்பிடப்பட்டிருக்கிறது . (வெகு காலமாய் இருக்கிறது என்பதைச் சொல்ல இந்த மேற்க்கோள்)



இந்த படை வெட்டுக்கிளிகள் எப்படி உருவாகிறது , தன்னை எப்படி மாற்றிக் கொள்கிறது ,கூட்டாக எவ்வாறு செயல் படுகிறது என்பதை படித்ததனில் உண்டான வியப்பில் உருவானது இந்த நாவல் .

"Scientific Thriller "- வகையில், "Mother of Mankind " - நாடுகளை கதைக்களமாக கொண்டு எழுதப்பட்டிருக்கும் இந்த நாவல் படிப்பவர்களுக்கு புதிய அனுபவத்தையும், அறிந்திராத தகவல்களையும் இந்த தரும் என்ற நம்பிக்கையுடன் .....

இது Amazon USA மற்றும் Amazon இந்தியா தளங்களில் "எல்ஜராது" என்னும் தலைப்பில் கிடைக்கிறது

எழுதியவர் : பாவி (12-Aug-20, 10:09 am)
சேர்த்தது : பாவி
பார்வை : 584

மேலே