கண்ணன் துதி
ஏதேதோ எண்ணங்கள் ஏதேதோ
புதுப் புது சிந்தனைகள்
நெஞ்சில் வந்து வந்து
போதம் பொழிகிறது அத்தனையும்
நிலையிலா மானிட வாழ்வின்
இன்ப துன்பங்கள் பற்றியே
கண்ணா உன்பாதம் பற்றி
மறவாது உன்னை மனதில்
நிறுத்தி உனையே போற்றி
பாடி உன் நிழலிலே
வாழ்ந்திட வரம் தாராயோ