உனக்குள் தேடு உன்னை

ஞானத்தைத் தேடி
அலைந்திட வேண்டாம்
உன்னைத் தேடிட
மறந்திட வேண்டாம்
தியானத்தை தினமும்
தொடர்வது கடிது
மௌனத்தைத் தொடர்ந்தால்
வாழ்க்கை இனிது
உன்னை அறிந்தால்
உண்மைப் புரியும்
அறிந்திட்ட பின்னே
எல்லாம் மறையும்

சரவிபி ரோசிசந்திரா

எழுதியவர் : சரவிபி ரோசிசந்திரா (13-Aug-20, 7:56 am)
Tanglish : unakkul thedu unnai
பார்வை : 107

மேலே