பாராட்டுவோம்

பாராட்டுவோம்

ஆலகால விஷத்தைக் கூட நம்பலாம்
காலதூதர் களையும் நம்பலாம் ஆனால்
என்றோ சொன்னார் சேலைகட்டும். மாதரை
என்றும் நம்பல் தவறென் ரார்பார்
சினிமாப் பாடலிலும் இதையேச் சொன்னார்
இனியும் இப்படி பேசுதல் சரியில்லை
சேலைகட்டும் அல்ல சேலகட்டும் என்றாராம்
சேலகட்டும் மாதரை நம்பாதே என்பது
சேல்மீன் போன்று கண்களை பெரிதாக்கி
ஆள்மயக்கும் பெண்டிர் என்பதையேக் குறிக்கும்
கவிதையில் நமது கவிக்காள மேகம்
விலைமாதை இப்படி விளக்கி யுள்ளார்
விளக்கினார் டாக்டர் கன்னியப்பன் அவர்களும்
விளக்கமின்று புரிந்தது எனக்கும்
விளக்கம் சொன்னவரை நாம்பாராட் டுவோமே

எழுதியவர் : பழனிராஜன் (13-Aug-20, 9:05 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 238

மேலே