யாக்கை நிலையாமை
அன்பு உள்ளம்
ஆழ்ந்த நித்திரைக் கொள்கையில்
அங்கம் கதறுகிறது
இதயம் துடிக்கிறது
நிலையில்லா வாழ்க்கையில்
நித்தமும் ஓடி
நிம்மதியைத் தேடுகிறோம்
நிம்மதி தொலைத்து
இறுதியாத்திரை செல்லும் வரை
மாயத்திரையில் துயில்கின்றோம்
மரணம் நெருங்கும் போது
மண்டியிட்டு அழுகின்றோம்
இறப்பின் கொடுமை
இன்னதென அறிந்தும்
அறியாமையில் உழல்கின்றோம்
அதீத ஆசையில்
சரவிபி ரோசிசந்திரா