வென்றுகாட்ட இயலும்
--------------------------------------
வாழ்க்கை என்பது
நேர்க்கோடு அல்ல ,
வளைவும் திருப்பமும்
கொண்ட வரைபடம் !
வறுமைக் கோடு
வரையப்பட்டது அல்ல,
வரையறுத்த வரம்பில்
வராதவொரு பகுதி !
ஏற்றத் தாழ்வுகள்
உருவானது அல்ல,
எண்ணக் குவியலில்
உருவாகும் நிலைகள் !
சாதிமதங்கள் என்பது
இயற்கை வழங்கியதல்ல
சமுதாயமெனும் காற்றில்
கலந்த நச்சுக்கழிவுகள் !
உரிமைகளைப் பெற்றிட
வன்முறை வழியல்ல
நீதிக்காக போராடுவது
தரணியில் தவறல்ல !
தோல்வி அடைவதும்
நிரந்தரமான ஒன்றல்ல
வெற்றி பெறுவதும்
அத்தனை சுலபமல்ல !
சுயநலமுடன் வாழ்வது
மனிதர்க்கு அழகல்ல
பொதுநலம் நினைப்பது
பிறப்பின் குற்றமல்ல !
ஒன்றுபட்ட மனங்களால்
வென்றுகாட்ட இயலும் !
சமத்துவ சமூகத்தால்
சமூகநீதி காக்கப்படும் !
--------------------------------------------
பழனி குமார்