மகளுக்கு மடல்
கருவில் உதித்த மகளுக்கு மனதில் உதித்த மடல்
................
நான் காணக் காத்திருக்கும் பொன்மகள்
என் வாழ்வின் பொருள் அவள்
என் மகள்
என் பொன்மகள்
இமை மூடிய உன் விழிகள் காண இமை மூடாமல் காத்திருக்கிறேன் கண்ணே
உன் பொற்பாதம் நெஞ்சில் தாங்க தவம் கொண்டு காத்திருக்கிறேன் கண்ணே.....
பனிக்குடத்தில் இருந்து கொண்டு படம் பார்க்கிறாய்
என் அமுத மொழிகளை ரசித்துக் கொண்டே என்னை உன்னிடம் சேர்க்கிறாய்
ஏனோ இப்போது மொட்டுக்கள் அழகாக தெரிகின்றன
உனைப் போலவே அவை மணம் சேர்க்க காத்திருப்பதனால்
நீ என் மனம் சேர்க் காத்திருப்பதை போல
ஆயிரம் முத்தங்களுடன் காத்திருக்கிறேன்
உனை கண்ட முதல் நொடியில் பரிசளிக்க....
வானத்து குட்டி தேவதை என்னவளின் வயிற்றுக்குள்....
பாதங்களால் தட்டி எழுப்பி எனை அழைக்கிறாய்....
இதோ இன்னும் சில நாட்கள் மட்டுமே என் இருகைகளில் உனை ஏந்தி நெஞ்சொடு உனை சுமக்க காத்திருக்கிறேன் கண்ணே.....
இதோ இனி விரைவில் வான் நிலவின் முழுபொலிவும் எப்போதும் என் வீட்டுக்குள்ளே...
என் மகளே நீ இன்னொரு நிலவாய் வருவாய்...
என் வாழ்வில் புது ஒளி தருவாய்...
உன் ஆசைகள் கேட்க ஆவலாய் இருக்கிறேன்
என் ஆருயிரின் அர்த்தத்தை உன்னிலே நான் காண்கிறேன்...
காதலே ஒரு பரிசு தான் இனி நீ தான் எங்கள் காதலின் பரிசே....
உச்சி முகர்ந்து உனை மெச்சி அணைக்கும் நாள் வேண்டி என் மணித்துளிகளை கடக்கிறேன்
மண்ணில் இருந்தும் பறக்கிறேன்.....
உன் குரல் ,...உன் ஓசை .....
அப்பா என அழைக்கும் அந்த கீதம்
அதுவே இனி என் இதயத்தின் உயிர் நாதம்
காத்திருக்கிறேன் இன்னும் சில மாதம்....
உன் நினைவே என் மனக் கடலின் ஓதம்....
உன் அப்பா என்ற குரல் கேட்க தான் என் அன்னையின் கருவில் அவதரித்தேனோ
உன் அன்பைக் காணத் தான் உன் அன்னையை கரம் பிடித்தேனோ....
என் நெஞ்சில் ஒரு கருவறை கொண்டு என் கண்மணி உன் நினைவுகளை வளர்க்கிறேன்
உன் செல்ல கால் உதைகள் இப்போது எனக்குள்ளும் உணருகிறேன்
எம் பொண்ணு என் தங்கம் என் அழகி என் அம்மா
என் கண்ணு
என் சாமி
என் தேவதை என் சந்தோசம் எல்லாமே இனி நீ தானே
உணக்காகத் தான் நான் வாழ்வேனே.....
இதில் சொல்ல மறந்த கனவுகளை எல்லாம் நீ வந்த பின்பு சமர்ப்பிக்கிறேன் மகளே....
பிறந்து வா....
புது சாதனைகள் படைக்க....
உன் அன்பால் இந்த உலகை ஆள...
இப்படிக்கு
உன் அப்பா(VK)