வேலவனைப் பழித்திடாதே வேலைப் பழித்திடாதே

திருமால் கரங்களில் சங்கும் சக்கரமும்
திருமுருகன் கையிலோ வேல் ஆயுதம்
மாலவன் சக்கரம் சுழன்றால் அகிலமே
அச்சத்தால் நடுங்க பகைவர் ஓடிஒளிவர்
அவரைத் துரத்தி சிரஸைக் கொய்திடும்
சுதர்சன சக்கரம் நல்லோரை வாழவைக்க
மால்மருகன் வேல் வீணரை மாய்க்கும்
வேலனைப் பழிக்காதே வேலை இழிக்காதே
காக்கும் வேல் பகைவரை கொய்து மாய்த்திடும்
வாய்த்தந்தான் இறைவன் நாவால் நல்லவையே
ஓயாது ஓதிட நல்ல இறைவன் நாமத்தை

வேலையேதும் இல்லை என்றால் ஒதிங்கிவாழ்
வேலை வீணே பழித்து வேலவன்
வேலுக்கு சிக்கா தே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (16-Aug-20, 6:03 pm)
பார்வை : 75

மேலே