உழவன்
ஏறில்லை கலப்பை இல்லை மாடில்லை
இன்று மண்ணை உழுதிட 'டிராக்டர்'
கேணியுண்டு ஏற்றமில்லை இன்று நீரிறைக்க
'மொடர்பும்பு' உண்டு உழவன் மண்ணோடு
மாடோடு ஏர்முனையோடு பேசிய நாட்கள்
சென்ற காலமானது இன்று வேகமான
உலகில் இதற்கெல்லாம் ஏது இடம்
மனம் நிறைய பாட்டுபாடி விதை
விதைத்து நாத்து நட்டு பின்னே
அறுவடையும் செய்து விளைந்த நெல்லை
காசாக்கி கூட்டுகுடும்பத்துடன் இனிது
வாழ்ந்த நாளெல்லாம் நேற்றானதே இன்று
மண்ணில் வெறும் பணமே எதிர்பார்க்கும்
நிலைமையில் உழவன்... கட்டுப்படியாகவில்லை
என்றால் நிலத்தையே விற்றுவிடுகிறான்
நகரத்து 'மேன்மக்களுக்கு' நெல்நிலம்
அடுக்குமாடிகளாய் மாறி கிராமமும்
நகரமாகிட.... இப்படியே போனால்
நாளை யுலகில் உழுநிலம் இருக்குமா
உள்ளவர்க்கு குலமும் இல்லாது போகுமோ
யார் கண்டார் நெஞ்சம் நடுங்குது