கிரிக்கெட்டும் தோனியும்

கிரிக்கெட் விளையாட்டில்
பலர் களம் கண்டதுண்டு
சிலர் நட்சத்திரம் போல்
ஜொலித்ததும் உண்டு
பலர் பூஜ்ஜியம் கண்டு
வீழ்ந்ததும் உண்டு...! !

இந்திய கிரிக்கெட்
விளையாட்டுக்கு பலர்
சிறப்பான பங்களிப்பு
கொடுத்துள்ளார்கள்.
அதில் சிலர்
ஆர்பாட்டம் செய்து
அதிரடி காட்டியதுமுண்டு
சிலர் அமைதியாக
சாதனைகள் புரிந்ததுமுண்டு.

பலர் வருவார்கள் போவார்கள்
ஆனால் "தோனியை போல்"
அமைதியான அதிரடி வீரரை
காண்பது மிக அரிது.

இந்திய கிரிக்கெட்
பல மகுடங்களை
தாங்கி வலம் வந்துள்ளது.
ஆனால்...
தோனியின் தலமையில்
பெறப்பட்ட மகுடங்களுக்கு
சற்று கூடுதல் மதிப்புதான்.

எந்த பயணமும்
ஒரு நாள் முடிவு பெறும்...
ஆனால் "தல தோனியே"
உங்கள் கிரிக்கெட் பயணம்
முடிவுக்கு வந்தது என்று
"கேப்டன் கூல்" நீங்கள்
அறிவித்தாலும்
எங்கள் மனதில்
தலைமை பண்புக்கு
சிறந்த தலைவன் நீ
என்றுமே ....! !
"நாட் அவுட் பேட்ஸ்மேன்" தான்
வாழ்க நலமுடன் பல்லாண்டு...! !
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (16-Aug-20, 12:09 pm)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 133

மேலே