கண்களில் கண்ணீருடன் நீ 555

***கண்களில் கண்ணீருடன் நீ 555 ***
அன்பே...
பள்ளி பருவ நாட்களில்
வறண்ட சாலையில்...
ஒற்றை
மலராய்
நீ வருவாய்...
நீ வருவாய்...
ரெட்டை ஜடையிலும் ஒருபக்கம்
மட்டுமே மலர் சூடி இருப்பாய்...
மலரே மலர் சூடியதால் நான்
நித்தம் நித்தம் ரசிப்பேனடி...
உன் இதழ்கள்
பிரியாத
பிரியாத
புன்னகையில்...
கண்சிமிட்டி நலம்
விசாரிப்பாய் கண்ணழகே...
எத்தனை நாட்கள் நான்
உணவருந்தி இருப்பேன்...
தினம் நீ கொண்டு
வரும் உணவை...
பொய்யான கோபத்தில் நீ
உதட்டை சுழிக்கும் அழகில்...
நான்
சொக்கி போவேனடி...
சொக்கி போவேனடி...
பள்ளியின் இறுதி நாளில்
கண்ணீர்துளியுடன் விடை கொடுத்தாய்...
இன்று நினைத்தாலும்
புதுமலராய்
எனக்குள் மலர்கிறாயாடி...
எனக்குள் மலர்கிறாயாடி...
கண்ணே உன் இதழ்
பிரியாத புன்னகையுடன்.....