கூந்தலே

தரையில் தவழும் உனையென்றும் வெறுப்போர்
உணவில் ஊடுருவிய உனையாவரும் தூற்றுவோர்
தலையில் நீ இருக்க உனை தழுவ துடிப்பர்..
சீப்பில் சிக்கி பிரிந்த உனையுடன் பார்த்ததும்
கருமை மறைந்து வெண்மையுன் புகுந்ததும்
சொத்தை தொலைத்தார் போல் துயருற்றுவர்..
உனை போற்றாத பெண் எங்குமில்லை..
உன்னில் மயங்கா ஆண் மகனுமில்லை..
உனை தொடாமல் ஊடல் கூடல் இல்லை..
நீளமாய் நீ பிணைந்து கடிகார ஊசலாய்
வலம் இடம் ஓடி பார்ப்பவரை கவர்வாய்..
நீளமாய் குட்டையாய் ஒல்லியாய் சுருட்டையாய்..
பரட்டையாய், கோரையாய் வகை வகையாய் நீ..
இல்லாதவள் தலையில் செம்பட்டையாய் நீ அன்று..
இருப்பவள் தலையில் செவ்வானமாய் நீ இன்று..
பேனையும் பொடுகையும் பாசமாய் நாடுவாய்..
நாடிய உனை சார்ந்திருக்கும் வியாபாரம் கோடி..
கோபம் வெடிக்க முதலுனை அழைப்போர் பேடி..
உனை பாட்டில் இழுக்கா கவிஞன் இங்கு இல்லை..
உனை விலகி நிற்க நான் வேறு இல்லை..
-------------------
சாம்.சரவணன்

எழுதியவர் : சாம்.சரவணன் (16-Aug-20, 9:43 pm)
Tanglish : koonthale
பார்வை : 732

மேலே