அஃறிணை உணர்வுகள்
மடிக்கணினி பணி செய்வோருக்கு
தன் மனையே பணிமனையாய்..
வகுப்பறையில் பயின்ற மாணாக்கர்க்கு
படுக்கையறையே வகுப்பறையாய்..
உடல் சூடு கண்ட மெத்தையது
மடிக்கணினி சூடு பட்டு கதறிடுமோ..
சக்கரமில்லா நாற்காலிகள் தரதரவென
இழுபட்டு கால்கள் கரைய கரைந்திடுமோ..
தொடுதலும் தடவுதலும் வலி தராதெனினும்
தொடர்ந்து தொட்டிட தொடுபேசி துவண்டிடுமோ..
ஓய்வின்றி ஓடும் மின்விசிறியது
ஓய்வெடுக்க மின்வெட்டுக்கு ஏங்கியிருக்குமோ..
தினம் விதவிதமாய் உணவு பார்த்த
டப்பாகள் எல்லாம் துரு சேர துடிக்கின்றனவோ..
உயர்திணை மனிதரெல்லாம்
மனைக்குள் மணிக்கணக்கில் அடங்கிட
அஃறிணை பொருள் யாவும் அழுகிறதோ இந்நாளில்..
------------
சாம். சரவணன்